பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 1.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

20

வேங்கடம் முதல் குமரி வரை

இனி, கோயிலுக்குள் போகலாம். கோயில் மற்றையத் தமிழ்நாட்டுக் கோயில் கட்டடக் கலைக்கு எடுத்துக் காட்டாக அமைந்திருக்கிறது. கோயிலின் தலைவாயிலைப் படிக்காவலி என்கிறார்கள். அந்த வாயிலை ஒரு கோபுரம் அணி செய்கிறது. இந்த வாயிலில் நுழைந்து முதற் பிராகாரத்தையும் கடந்தால் வெள்ளி வாயில் (வெண்டி வாகிலி). அதனுள் நுழைந்தால் விமானப் பிரதக்ஷிணம். இங்கு எங்கே திரும்பினாலும் ஒரே தங்கமயம். பங்காரு பாவி என்னும் தங்கக் கிணறு இருப்பது இங்கேதான். இந்தப் பிராகாரத்தைச் சுற்றினால் கர்ப்பகிருஹத்தின் மேல் கட்டப்பட்டிருக்கும் ஆனந்த நிலைய விமானம். ஒரே ஜோதிமயம். இரவிலும் பகலிலும். இந்தப் பொன் போர்த்த விமானத்தைப் பதுப்பிக்க முப்பத்திரண்டு லட்சம் ரூபாய் செலவாம்.

இந்தத் தங்க விமான தரிசனம் செய்த பின், தங்க வாயிலைக் (பங்காரு வாகிலி} கடந்தால் கர்ப்ப கிருஹம் வந்து சேரலாம். இந்தத் தங்க வாயிலில் இரண்டு தங்கமயமான துவார பாலகர்கள், தங்கச் சட்டங்களுக்குள்ளே நின்று கொண்டிருப்பார்கள். இவர்கள் கண் திறந்து பார்த்துவிடக் கூடாதே என்று கண்களை மறைத்து ஒரே பட்டையான திரு நாமம். இவர்கள் அனுமதி பெற்றே உள்ளே நுழைய வேண்டும்.

ஆம்! இந்த 'வேங்கடத்து மேவிய வேத நல்விளக்கை'க் கண்டு தொழ எவ்வளவோ வசதி. கட்டணங் கட்டிச் சேவை செய்கிறவர்களுக்குச் சலுகை அதிகம்தான். தரும தரிசனக்காரர்கள் எல்லாம் 'கியூ' வரிசையிலே காத்து நின்றுதான் வேங்கடவனைக் காண வேண்டும்.

தரிசனத்திலே (ஆம், பிரசாதத்தில் அல்ல) கண்ணாயிருப்பவர்கள், ஒரு வியாழன் மாலை திருமலை சென்று இரவு ஏழு மணிக்கு இரண்டு ரூபாய் கட்டணம் செலுத்தி டிக்கெட் பெற்று