பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 1.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

27

யானை செய்யும் திருமஞ்சனம் புஷ்ப அலங்காரம் எல்லாம் சுத்தமாக இல்லை என்று பாம்பு நினைக்கிறது. அதனால் யானையின் துதிக்கையில் பாம்பு நுழைந்து யானைக்கு வேதனை தருகிறது. யானையும் தும்பிக்கையை ஓங்கி அறைந்து, பாம்பைக் கொல்கிறது. பாம்பின் விஷம் ஏறிய காரணத்தால் யானையுமே மாண்டு மடிகிறது.

இப்படியே சிலந்தி பாம்பு யானை மூன்றும் இத்தலத்திலேயே முத்தி பெறுகின்றன. அதனால் தலமும் சீகாளத்தி என்றே பெயர் பெறுகிறது.

இந்தக் காளத்தி அப்பரது கோயில் பஞ்சபூத ஸ்தலங்களில் ஒன்று. இதை வாயுத் தலம் என்பார்கள். அதற்கேற்ப கர்ப்ப

காளி கோபுரம்

கிருஹத்தில் சுடர்விட்டுக்கொண்டிருக்கும் விளக்குகளில் இறைவன் திரு முடிக்கு அணித்தே உள்ள ஒரு விளக்கின் சுடர் மட்டும் காற்றிலே அசைவுற்று எப்போதும் துடித்துக் கொண்டே இருக்கிறது. இந்த விளக்குக்கு மட்டும் காற்று எங்கிருந்து வருகிறது என்பது கண்டறியாத அதிசயமாகவே இருக்கிறது.

இது வாயுத்தலம் என்பதற்கும் ஒரு சிறு கதை. ஆதி சேஷனுக்கும் வாயு பகவானுக்கும் ஒரு பலப்