பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 1.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

37

சுனைகள், தடாகங்கள் தான். ஆதலால் இந்தப் பகுதிக்கே சர்க்கார் கணக்கில் 'மடம் கிராமம்' என்று பெயர். சுகாதாரக் கொள்கைகள் இல்லாதவர்கள் சரவணப் பொய்கையில் நீராடி விட்டு மலை ஏறலாம். அதற்குத் துணிச்சல் இல்லாதவர்கள் தலையில் தீர்த்தத்தைப் புரோக்ஷித்துக் கொண்டு புறப்பட்டு விடலாம்.

மலை மேல் ஏறுகிற போது, வழியில் இருக்கும் பிரம சுனை, அங்குள்ள விநாயகர் பிரமலிங்கம் எல்லாவற்றையும் தரிசிக்கலாம். மலை உச்சி சேர்ந்ததும், இரத வீதியில் வலம் வரலாம். அங்குள்ள இந்திர நீலச் சுனையைப் பார்த்துவிட்டு, செங்கழுநீர் விநாயகரை வணங்கிவிட்டு, கோயிலினுள் நுழைந்தால், நாம் முதல் முதல் பார்ப்பது துவஜஸ்தம்ப விநாயகரும் ஐராவதமுமே.

இங்கு ஐராவதம் சந்நிதியை நோக்கி நிற்காமல், கிழக்கு நோக்கி, எங்கேயோ அவசரமாகப் புறப்படத் தயாராக நிற்பது போல் நிற்கிறது. தெய்வயானையின் சீதனப் பொருளாக வந்தது ஐராவதம் என்றும், அப்படித் தேவ லோகத்தை விட்டு ஐராவதம் வந்து விட்டதால், அங்கு செல்வம் குறைய ஆரம்பித்ததென்றும், அந்தக் குறை நீங்க, முருகன் ஆணைப்படி, கிழக்கேயுள்ள தேவலோகம் நோக்கி நிற்கிறது என்றும், ஸ்தல வரலாறு கூறுகிறது. எனக்கென்னவோ இது சரியான வரலாறு என்று தோன்றவில்லை. 'தெய்வயானையை மணந்த பின், இந்தக் குமரன் தம் மயில் வாகனத்தைத் துறந்துவிடுகிறார் (இத்தலத்தில் மூலவர் உத்சவர் பக்கத்தில் எல்லாம் மயில் இல்லை என்பது கூர்ந்து நோக்கிக் கவனிக்கத்தக்கது). ஆதலால் பக்தர்கள் குறை தீர்க்க வெளியே விரைந்து செல்ல வேண்டியிருந்தால் வாகனம் வேண்டாமா? தெய்வயானை கொண்டு வந்த வெள்ளை யானையைத் தயாராக இருக்கும்படி கட்டளை இட்டு இருக்கிறான். அதுவும் 'எவர் ரெடி' என்பது போல் எந்த நேரமும் புறப்படத்