பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 1.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

36

வேங்கடம் முதல் குமரி வரை

தணிகை என்றால் அமைதி என்று பொருள். சூரபதுமன் முதலியவர்களைத் திருச்செந்தூரில் சம்ஹாரம் செய்து,வெற்றிக்குப் ம,இசாக இந்திரன் மகளாகிய தெய்வயானையைப் பெற்றுத் திருப்பரங்குன்றத்தில் அவளை மணம் முடித்துக் கொண்டு, அமைதியாகக் குடும்பம் நடத்த இந்தத் தேவனசேலாபத் தேர்ந்தெடுத்த இடம் இந்தத் தணிகைமலை.

சூரனோடு போர் செய்த பின், கோபமெல்லாம் தணிந்து, இந்தத் தணிகையில் வந்து தங்கியிருப்பதால், இத்தலத்தில் நடக்கும் கந்த ஷஷ்டி விழாவில் சூரசம்ஹாரம் கிடையாது. இப்படி அமைதி தேடி வந்து வணங்கும் பக்தர்களுக்கும் நல்ல மன அமைதியைத் தந்து தணிகாசலத்தின் புகழை நிலை பெறச் செய்து கொள்கிறான்.

திருத்தணி ஊருக்குச் சென்றதும், நம் கண் முன் நிற்பது தணிகைமலையும் அதன் மேல் ஓங்கி நிற்கும் கோயிலும், இம் மலையின் இரு புறத்திலும் மலைத் தொடர்கள் இருக்கின்றன. வடக்கே இருப்பது சற்று வெளுத்திருப்பதால் பச்சரிசி மலை என்றும், தெற்கே இருப்பது சற்றுக் கறுத்திருப்பதால் பிண்ணாக்கு மலை என்றும் மக்கள் சொல்கிறார்கள்.

மலை அடிவாரத்தில் உள்ள திருக்குளம் சரவணப் பொய்கை. இந்தப் பொய்கையைச் சுற்றியும், மற்றும் மலை ஏறும் வழிகளிலும் எண்ணிறந்த மடங்கள், சத்திரங்கள்,