பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 1.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

45

தக்கானைக் கடிகைத் தடங்
குன்றின் மிசை இருந்த
அக்காரக் கனியை
அடைந்து உய்ந்து போனேனே.

என்று பரவசத்தோடே பாடியிருக்கிறார். பிரபந்தப் பாடல்கள் நாலாயிரத்தில், கடிகாசல் நரசிம்பனைப் பற்றிய முழுப் பாடல் இது ஒன்று தான். ஒரு பாட்டு என்றாலும் ஒப்பற்ற பாட்டு. எத்தனை தரம் வேண்டுமானாலும் பாடிப் பாடி அனுபவிக்க வேண்டிய பாட்டு.

இத்தலத்திலே இத்துணைப் பெருமையுடைய தக்கானுக்கும் மிக்கானாக இன்னொரு மூர்த்தி இருக்கிறார், மற்றொரு சிறிய குன்றிலே, அவர்தான் யோக ஆஞ்சநேயர்.

இவரைக் காணப் பெரிய மலையை விட்டுக் கீழே இறங்க வேணும், அடிவாரத்தில் கொஞ்ச தூரம் நடக்க வேணும், படிகளின் வழியாய்ச் சுமார் இருநூறு அடி உயரமுள்ள மலை மீது திரும்பவும் ஏற வேணும். இங்குப் படிகள் எல்லாம் புதுப்பிக்கப் படவில்லை. இங்கேயும் கோயிலின் பிரதான வாயில் வடக்கு நோக்கியிருந்தாலும், சந்நிதி மேற்கு நோக்கியே இருக்கிறது. தம்முடைய தலைவனான நரசிம்மனை