பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 1.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

51

புரிந்தவன், முக்காடிட்ட தலையோடும், வளையங்கள் அணிந்த மூக்கோடும் வரும் அந்த நாட்டுப் பெண்களைக் காணச் சகிப்பானா?

இதை அப்பட்டமாகச் சொல்ல முடியாமல்தான், சும்மா பிரம்மசாரி வேஷம் போட்டு, அங்குள்ளவர்களையெல்லாம் ஏமாற்றிக் கொண்டிருக்கிறான், ஆம். அவன் 'கலைபயில் புலவன் கார்த்திகேயன்' அல்லவா? ஏமாற்றுவதையே ஒரு கலையாகக் கற்றிருக்கிறான் என்று தோன்றிற்று, எனக்கு.

வள்ளியை வேலன் மணந்த வரலாறு நிரம்ப ரஸமான கதை. எவ்வளவோ காலமாக, காவியமாக, கதா காலக்ஷேபமாக எல்லாம் எத்தனையோ தடவை கேட்ட கதை. வள்ளி மலைக் கோயில் எத்தனையோ நாடக மேடைகளில், வெள்ளித் திரைகளிலெல்லாம் பார்த்தும் அலுக்காத கதை.

ஆனால் இந்த வள்ளி பிறந்த இடம்; அவள் ஆலோலம் பாடிய பரண், அவளை முருகன் கண்டு காதலித்து மணம் புரிந்து கொண்டதலம் எல்லாம் எங்கிருக்கின்றன என்று இன்று வரையில் நிச்சயமாக இல்லை. திருநெல்வேலி ஜில்லாவில், கன்னியாகுமரி செல்லும் வழியில் ஒரு வள்ளியூர் இருக்கிறது, அங்கு வள்ளி பிறந்து வளர்ந்ததாக வரலாறு இல்லை. திருச்செந்தூரில் வள்ளி ஒளிந்த குகை ஒன்று இருக்கிறது.