பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 1.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

50

வேங்கடம் முதல் குமரி வரை

சித்தனாக இருக்கிறான்!' என்றார்கள். சரி என்று என் மனைவியைக் கோயிலுக்கு வெளியே நிறுத்தி விட்டு, நானும் அன்பர்களும் மட்டும் உள்ளே சென்றோம்.

உள்ளே கோயில் கொண்டிருப்பவன் நமக்கு மிகவும் அறிமுகமான ஆறுமுகன்தான். பளிங்கில் அமைந்திருந்த சிறிய உருவம். மயில் மேல் ஆரோகணித்திருந்தான் அவன். கார்த்திகைப்பெண்களான 'அறுவர் பயந்த ஆறு அமர் செல்வன்' அல்லவா? ஆதலால் அவனைக் கார்த்திகேயன் என்று அழைக்கிறார்கள், அங்கே.

ஆமாம் ஆறுமாமுகவன், தமிழ் நாட்டில் ஒன்றுக்கு இரண்டாக, வள்ளி தெய்வயானையை மணந்தவன் இங்கு மட்டும் பிரம்மசாரி என்று வேஷம் போடுவானேன் என்று எண்ணினேன். நண்பர்களைக் கேட்டேன். விடை கிடைக்கவில்லை.

அன்று மாலை பூனாத் தமிழ் அன்பர்கள் நடத்தும் கலைக் கழக விழாவிலே எனக்கு ஒரு பேச்சு. அங்குள்ள தமிழ் அன்பர்கள் திரளாக வந்திருந்தார்கள். விஷயம் விளங்கிற்று எனக்கு அப்போது. தமிழ் நாட்டுக் குறமகள் நம்பிராஜன் புத்திரி வள்ளியைக் கண்டு சொக்கி, அவள் காதலைப் பெற எவ்வளவோ தகிடுதத்தங்கள் செய்து, அந்த அழகியை மணம்