பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 3.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

11

சீரார் செந்நெல் கவரிவிசும்
செழுநீர்த் திருக் குடந்தை
ஏரார் கோலம் திகழக் கிடந்தாய்
கண்டேன் அம்மானே,

என்று துவங்கும் நம்மாழ்வார் பாசுரங்களைப் பாடுகிறார். பாட்டிலும், பாட்டின் பொருளிலும் உள்ளம் பரவசமாகி மெய்மறந்து நிற்கிறார். நாத முனிகள். யாத்ரிகர் பாடிக் கொண்டேயிருக்கிறார். கடைசியில் ‘குருகூர்ச் சடகோபன் குழல் மலியச் சொன்ன ஆயிரத்துள் இப்பத்தும் மழலைதீர்வல்லார் காமர் மானேய நோக்கியர்க்கே' என்று முடித்ததும் யாத்திரிகரை நோக்கி, இப்பிரபந்தம் முழுதும் தங்களுக்கு வருமோ என்று கேட்கிறார் நாதமுனிகள். யாத்ரிகரோ அந்தப் பத்துப் பாடல்களுக்கு மேல் தெரியாது என்கிறார்.

அன்றே நம்மாழ்வார் பாடல்களையெல்லாம் தேடிப் பிடிக்க முனைகிறார் நாதமுனிகள். நம்மாழ்வார் அவதரித்த குருகூருக்கு வருகிறார். நம்மாழ்வாரின் சிஷ்யராக இருந்த மதுர கவியாழ்வாருடைய பரம்பரையிலே வந்த ஒருவரைக் கண்டுபிடித்து நம்மாழ்வார் பாடல்களையெல்லாம் திரட்டுகிறார். அதன் மூலமாகவே மற்ற ஆழ்வார்களது பாசுரங்களையும் தேடிச் சேகரித்து நாலாயிரப் பிரபந்தமாகத் தொடுக்கிறார். அந்த நாலாயிரம் பாடல்களே இன்று திவ்யப் பிரபந்தம் என்று வழங்குகிறது நம்மிடையே. இப்படித்தான் நமக்குத் திவ்யப் பிரபந்தம் கிடைத்திருக்கிறது.

இந்தத் திவ்ய பிரபந்தத்தைத் திரட்டித் தந்தவர் நாதமுனிகள். அந்த நாதமுனிகளை இப்பணியில் ஈடுபடுத்தியவன் ஆரா அமுதன். அந்த ஆரா அமுதன் கோயில் கொண்டிருப்பது கும்பகோணத்திலே. அவனது கோயில்தான் பிரசித்தி பெற்ற சாரங்க பாணி கோயில், அக்கோயிலுக்கே செல்கிறோம் நாம் இன்று. நாம்தான் கும்பகோணத்தில்