பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 3.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

42

வேங்கடம் முதல் குமரி வரை

என்று பாடியிருக்கிறார். நாமும் அப்பரது அடிச்சுவட்டில் இந்தத் தர்மபுரி ஈசுவரையும் விமலநாயகியையும் வணங்கி மேற் செல்லலாம். அங்கு லிங்கத் திருவுரு, அம்மை வடிவம் தவிர வேறு விக்கிரகங்களே இல்லை. இக்கோயிலுக்குப் பக்கத்திலேயே துறையூர் சிவப்பிரகாசரது சமாதிக் கோயில் இருக்கிறது. அதிலுமே பல பகுதிகள் இடிந்து தான் கிடக்கின்றன. மேற்றளி, தென்தளி எல்லாம் எங்கேயிருந்தன என்று தெரிந்து கொள்ளுதல் எளிதன்று. நிரம்ப விவரம் தெரிந்தவர்கள் போல் அதையும் இதையும் காட்டுவார்கள் சிலர். நாம் அவர்களை யெல்லாம் பின்பற்ற வேண்டாம். வடதளியில் இருந்த பம்பைப் படையூர் சென்று தெற்கே திரும்பி, திருமலைராயன் ஆற்றைக் கடந்து பழையாறை கீழ்த் தளிக்குச் செல்லலாம். கீற்றளி, மேற்றளி என்றெல்லாம் சொன்னால் ஒருவருக்கும் தெரியாது. இதுவே இன்று பழையாறை என்று வழங்குகிறது.

இங்குள்ள சோமேசர்லோகாம்பிகை கோயில் பெரிய கோயில். சோழர் சிற்பப் பணிக்கு ஓர் எடுத்துக்காட்டு. வாயிலும் வாயிலை அடுத்த மதில் சுவரும் அச்சுவரில் உள்ள சிற்ப வடிவங்களுமே தக்க சான்று பகரும். ஆனால் கோயிலுள் நுழைந்தால், ஐயகோ! அந்தக் கோயில் சிதிலமாகக் கிடக்கும் நிலை கண்டு வருந்தவே செய்வோம். வெளிப் பிரகாரத்திலே தெற்கு நோக்கிய சந்நிதி, லோகாம்பிகை அம்மன் சந்நிதி, அது இருக்கிற நிலையில் அங்கு நுழையத்