பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 4.pdf/105

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

102

வேங்கடம் முதல் குமரி வரை

இத்தலத்துக்குச் சம்பந்தர், சுந்தரர் மாத்திரம் வந்தார் என்றில்லை. அப்பருமே வந்திருக்கிறார். அற்புதமாக; திருத்தாண்டகம் பாடியிருக்கிறார்.

மயலாகும் தன்னடியார்களுக்கு
அருளும் தோன்றும், மாசிலாப்
புன்சடைமேல் மதியம் தோன்றும்,
இயல்பாக இடு பிச்சை ஏற்றல்
தோன்றும், இருங்கடல் நஞ்சுண்டு
இருண்ட கண்டம் தோன்றும்,
கயல்பாய கடுங்கல் உழிக்,
கங்கை நங்கை ஆயிரமாம்
முகத்தினோடு வானில் தோன்றும்,
புயல்பாய சடை விரித்த
பொற்புத் தோன்றும் பொழில்
திகழும் பூவணத்தெம் புனிதனார்க்கே

என்ற பாடல் மிக்க சுவையுடைய பாடல் மட்டும் அல்ல இறைவனது திருக்கோலங்களையெல்லாம் விளக்கும் பாடலும் ஆயிற்றே.

இக்கோயிலில் பாண்டிய மன்னர்களில் கோநேரின்மை கொண்டான். பராக்கிரம பாண்டிய தேவர் முதலியவர்களின் காலத்தில் செதுக்கப்பட்ட கல்வெட்டுகள் இருக்கின்றன். இக்கல்வெட்டுக்களில் இறைவன் திருப்பூவணமுடைய நாயனார் என்று குறிக்கப் பெற்றிருக்கிறார்.

இந்த வட்டாரத்தில் இக் கோயிலைத் தவிர வேறு குறிப்பிடத்தக்க கோயில்கள் இல்லை. அறுபத்து நாலு திருவிளையாடலில் ஒன்றான ரஸவாதம் நடத்திய இடத்தையும் பார்த்தோம். 63 நாயன்மாரில் ஒருவரான இளையான்குடி. மாறனையும் பார்க்க வேண்டாமா? அவர் சரித்திரம் பிரபலமானதாயிற்றே. தமிழரின் விருந்தோம்பல் பண்பாட்டுக்குச் சிறந்த இலக்கியமாக