பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 4.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

8

தெளிவு தேவைப் பட்டாலோ, கண்ணை மூடக் கொண்டு பார்ப்பார்கள். பின்னர் ராபர்ட் சீவெல், கில்ஹார்ன், பர்னல்பூலர், ஹீரா, ஹூல்ட்ஸ், ஜோவா துப்ரே, பெர்சி பிரவுன் என்று ஏதேதோ வாய்க்கு வழங்காத பெயரை எல்லாம் உச்சரிப்பார்கள். அப்புறம் ஐயம் தீர்ந்து தெளிவு எற்பட்டு விட்டதற்கு அறிகுறியாக “ஓஹோ! சரிதான்; அதானே பார்த்தேன்" என்று தமக்குதாமே ஆறுதலைந்து நடையைக் கட்டி கொண்டு விடுவார்கள்.

நம்மைப் போன்றவர்கள் கிட்டே வந்து “என்ன ஐயா, இதில் என்ன விசேடம்?” என்று கேட்டால் “இந்தக் 'கர்பெல்' இருக்கிறதே இது எந்த பீரியடா இருக்கலாம் என்று யோசித்தேன். 'வேவ்லைன்' இருப்பதாலே மகேந்திரனுக்குப் பின் காலமாகத்தான் இருக்க வேண்டும் என்று முடிவு கட்ட வேண்டியதாக இருக்கிறது” என்ககூறுவார். 'கார்பெல்' என்றால் நமக்கு ஒன்றும் தெரியாது. தமிழ் நாட்டுத் தூணின் மேலே, பழுவை ஏற்றி தூணின் மையத்திற்குக் கொணர்வதற்காக தமிழனால் வைக்கப்பெற்ற அதற்குத் தமிழில் 'போதிகை' என்று பெயர் என்பது, பாவம் அவருக்குத் தெரியாது. இவர்கட்கு கலையார்வம் நிரம்ப உண்டு. பிறமொழி அறிஞர்கள் எழுதிய விளக்க அல்லது ஆராய்ச்சி நூல்களைப் படித்துவிட்டு அதன் மூலமாக நம் நாட்டு கலைமுறைகளைத் தெரிந்து கொண்டு மதித்துப் போற்ற முன் வந்தவர்கள். அவர்களுள்ளும் மிகச் சிலர் இருக்கிறார்கள், முற்கூறப்பட்டவர்களில் இவர்கள் ஒரு அளவு வேறுபட்டவர்களும் ஆவார்கள். ஓவியம், சிற்பம், படிமம், முதலியவற்றை ஆங்கில நூல்களின் மூலமும், தமிழ் நூல்களின் மூலமும் தெரிந்து கொண்டு பின்னர் நூல்களைத் தூரத்தே வைத்துவிட்டு நேரே பொருளோடு உறவாடத் தொடங்கி விடுவார்கள். வேலைப் பட்டறைகளையெல்லாம் சென்று காண்பார்கள். வேலை முறைகளையும் வித்தியாசங்களையும் மனதில் வாங்கிக்கொண்டு விடுவார்கள். நிர்மாண வகைகள், வர்க்க பேதங்கள், மூர்த்தி பேதங்கள், ஆசன முறைகள், அஸ்த முத்திரைகள் முதலியவற்றில் தெளிவு ஏற்படுத்திக் கொண்டு விடுவார்கள். தமிழ் இலக்கியங்கள், வரலாற்றுச் செய்திகள், பக்திப் பாடல்கள், புராணத் தத்துவங்கள்,