பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 4.pdf/12

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

9

தல புரானைக் கதைகள், கர்ண பரம்பரைக் கதைகள் இவற்றிலெல்லாம் கருத்தைச் செலுத்தி கவினுடைபவற்றை மனத்திலும், கையேட்டிலும் பதித்துக் கொண்டு விடுவார்கள்.

இப்படித் தங்களைப் பக்குவப்படுத்திக் கொண்ட பிறகு சொல்லையும், சுவையையும், கல்லையும், செம்பையும் எல்லாம் சுவைத்துச் சுவைத்து இன்புறும் இயல்பினராகி விடுகிறார்கள். பின்னர் அவற்றை அணுகுவதில் அவர்கட்கு அச்சமோ, அன்றி சங்கோஜமோ கூட ஏற்படுவதில்லை. அகம் ஓட்டிய, ஒன்றிய, உறவே கொண்டு விடுவார்கள். அப்படித் தோய்ந்து துய்க்கும் கலையன்பர் தொகை விரல்விட்டு எண்ணக் கூடியதாகவே இருக்கும்.

அத்தகைய சிறு தொகையினருள் சகோதரர் பாஸ்கரன் அவர்கள் ஒருவர். அவருடன் கல் பேசும்; செம்பு இசை பாடும்; சுதைகள் எல்லாம் நடமாடும். அவற்றை எல்லாம் அவர் காண்பார்; நோக்குவார்; தேர்ந்து தெளிவார். அத்துடன் அமைவரா? நண்பர்களை எல்லாம் கையைப் பிடித்து இட்டுச் செல்வார். சில முரண்டுகளைக் காதைப் பிடித்து இழுத்தும் செல்வார். கலைச் செல்வங்களின் முன்னே கொண்டு நிறுத்தி எல்லோரையும் துய்க்கும்படியம் செய்து விடுவார்! தாயின்புறுவதைக் கண்டு உலகின்புறச் செய்யும் வித்தையிலும் கைதேர்ந்தவர் சகோதரர் பாஸ்கரன் அவர்கள், எண்ணற்றவர்களின் வாழ்க்கையில், கலைப் பணியால் கடவுள் நம்பிக்கையையும் தெய்வ பக்தியையும் வித்திட்டு லிளையச்செய்த புண்ணியனாகவும் அல்லவா விளங்குகிறார். அவர்களை எல்லாம் தலயாத்திரை செய்ய வேண்டும் என்ற வேட்கை கொள்ளவும் செய்துலிட்ட அருமையைப் பாராட்டாமல் இருக்க முடியுமா என்ன?

இலக்கிய ரசலையும், கலைப் பித்தமும், பக்தி ஈடுபாடும் ஒருசேரப் பெற்ற தனி வழியை கடைப்பிடித்துச் செல்லுபவர் ஆனதால் ஒன்றில் ஒருசிக்கல் ஏற்பட்டால் மற்றொன்று வந்து கைகொடுத்துத் தீர்த்து வைத்து விடுகிறது. அவருக்கு. 'சிக்கல் விடுபடாதோ' என்று பிறர் மயங்கக் கூடிய இடங்களில் அந்தச் சிக்கலில் அகப்பட்டுக் கொள்ளாமல் லாகவமாக அதைத் தாண்டி அப்பாற் சென்று விடுகிறார் இவர். பல இடங்களில் பெருமையாகப்