பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 4.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

110

வேங்கடம் முதல் குமரி வரை

இத்தலத்தில் சங்கப்புலவர் கபிலரும் வாழ்ந்திருக்கிறார். முன்னரே நாம் திருக்கோவிலூர் போயிருந்த போது. அவர் பாரியின் சிறந்த நண்பர் என்றும், பாரி மக்களுக்கு மணம் முடித்து வைத்தபின் எரிமூழ்கி இறந்தனர் என்று அங்குள்ள கபிலக் கல் கூறும் கதை மூலம் தெரிந்திருக்கிறோம். மணிவாசகரைப் போலவே, கபிலரும் இவ்வாதவூரில் பிறந்தவர்தாம். இவர் சின்னப் பிள்ளையாக இருந்தபோதே ஒரு பாட்டுப் பாடியிருக்கிறார். பாட்டு இதுதான்.

நெட்டிலை இருப்பை வட்ட வான்பூ வட்டாதாயின்
பீடுடைப் பிடியின் கோடு ஏய்க்கும்மே! வாடினோ பைத்தலைப் பரதர் மனைதொறும் உணங்கும்
செத்தனை இரவின் சீர் ஏய்க்கும்மே!

நெடிய இலைகளையுடைய இலுப்பைப்பூ வாடாமல் இருந்தால் பெண் யானை பின் கொம்பை ஒத்திருக்கும், வாடிவிட்டாலோ வலையர் வீடுகளில் காய்ந்து கிடக்கும். இறா மீன்போல் சுருண்டு கிடக்கும் என்பது பாட்டின் பொருள். இந்தப் பாட்டினையும் நினைவுபடுத்தி இந்தப் பாடல் பாடி!! கபிலனார் பிறந்த ஊர் திருவாதவூர் என்று திருவிளையாடல் புராதனம் கூறும்.

நீதிமா மதுரக நீழல்
'நெட்டிலை இருப்பை' என்றோர்
காதல்கூர் பனுவல் யாக்கும்
கபிலனார் பிறந்த மூதூர்
வேதநாயகனூர் வாழ் திருவாதவூர்

என்பது பாடல். ஆகவே இந்த ஊர் சிறந்த இலக்கியப் பிரசித்தி உடைய ஊராகவும் இருந்திருக்கிறது.

எல்லாம் சரிதான். மணிவாசகர் பிறந்த இடம், வீடு ஒன்றும் இந்தத் தலத்தில் இல்லையா என்று நீங்கள் கேட்பது காதில் விழுகிறது வேதநாயகர் கோயிலில் இருந்து தெற்கே இரண்டு பர்லாங்கு தூரத்தில் ஒரு சிறு கோயில் கட்டியிருக்கிறார்கள், அங்குதான் மனிவாசகர் வீடு இருந்ததாம். அதனால் ஊர் மக்கள் கொஞ்சம்