பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 4.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாபகரத் தொண்டைமான்

150

சங்கர நாராயணன்

லிங்கர் சந்நிதி. வடபுறத்தில் கோமதி அம்மையின் திருக்கோயில். இருவருக்கும் இடையே சங்கர நாரணர் சந்நிதி. கோபுர வாயிலில் துழைந்து நடந்தால் நாம் முதலில் சென்று சேர்வது சந்நிதியில் தான், சங்கரலிங்கர் புற்றிடம் தோன்றியவர். ஆதலால் அவரை வன்மீகநாதர் என்றும் அழைப்பர். ஆதியில் இந்த இடம் முழுதும் புன்னைவனமாக இருந்திருக்கிறது. வனத்தைக் காத்து வந்த காவல் பறையன் அங்கிருந்த புற்றை வெட்ட, புற்றில் ஒரு பாம்பும் லிங்கமும் இருந்திருக்கின்றன. இந்தத் தகவலைத் திருநெல்வேலியை அடுத்த மணலூரில் இருந்து அரசாண்ட உக்கிர பாண்டியனிடம் சொல்ல, உக்கிர பாண்டியன் காட்டை வெட்டித் திருத்தி