பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 4.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

177

அக்கோயிலுக்குப் பக்கத்திலேயே நன்றாகக் குளிப்பதற்கு வசதியாக அருவிக்கரை ஒன்று இருக்கிறது. அதற்கு அகத்தியர் அருவி என்றே பெயர்.

அங்கிருந்து நாலு பர்லாங்கு மலைமேல் ஏறிச் சென்றாால் பிரும்மாண்டமான உயரத்திலிருந்து விழும் கல்யாணி தீர்த்தத்தைப் பார்க்கலாம். ஆம்! பார்க்கலாம்; எட்டி நின்றுதான் பார்க்கலாம், நெருங்கிச் செல்ல எல்லாம் முடியாது. அது பல பலிகள் வாங்கிய அருலி, சிறந்த தேசத்தொண்டரும் தமிழ் அறிஞருமான வ. வே. சு. அய்யரையும் அவரது மகளையும் பலி கொண்ட அருவி என்பதை நம்மால் மறக்க முடியுமா என்ன? ஆதலால் வந்த சுவடு தெரியாமல் இறங்கி வந்து அகத்தியர் அருவியில் நீராடிவிட்டு, பாபநாசத்துக் கோயிலுக்கே வந்து விடலாம்.

பாபநாசம் கோயில் வருமுன் ஏன் இந்த அகத்தியர் இங்கு வந்து குடியேறினார் எந்த விவரம் தெரிந்து கொள்ள வேண்டாமா? கதை நமக்குத் தெரிந்ததே தான். இமவான் மகளான உமையை இறைவன் திருமணம் செய்ய இசைகிறான். அத்திருமணத்தைக் கண்டுகளிக்க நாட்டிலுள்ள மக்கள், முனிவர், தேவர் எல்லோருமே சென்று சேருகிறார்கள் இமயமலைச் சாரலுக்கு. இப்படி நாட்டில் உள்ளவர்கள் எல்லோரும் ஒரே இடத்தில் குழுமியது காரணமாக, அந்த வடதிசை தாழ்கிறது. தென்திசை உயருகிறது. நாட்டைச் சமன் செய்யவேண்டிய பொறுப்பு இறைவனைச் சார்கிறது. அவர் வந்திருக்கும் முனிவர்களிடையே இருந்து அகத்தியரை அழைக்கிறார். அவரைத் தென்திசை செல்லச் சொல்கிறார். அவரோ, 'நான் மட்டும் திருமணக்கோலம் காண வேண்டாமா?' என்று ஏங்குகிறார். அதற்கு இறைவன், 'அகத்தியரே! என் சொல்லைத் தட்டாமல் தென்திசை செல்லும். திருமணம் முடிந்ததும் நான் நேரே தென் திசை வந்து என் திருமணக் கோலம் காட்டுகிறேன்' என்கிறார். அதன்படியே கங்கா 'ஜலத்தைத் தம் கமண்டலத்தில் அடக்கிக்கொண்டு தென் திசைக்கு வருகிறார் அகத்தியர். வழியில்

கே மு.கு.வ.-12