பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 4.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
24. கிருஷ்ணாபுரத்து வேங்கடநாதன்

சோழநாட்டில் ஒரு ராஜகுமாரி, அடுத்துள்ள பாண்டி நாட்டிலே ஒரு வீரன். ஊழ்வினை வசத்தால் எடுப்பாரும் கொடுப்பாரும் இன்றி ஒருவரையொருவர் பார்க்கின்றனர். காதல் கொள்கிறேனர், ஆனால் இரண்டு நாட்டுக்குமோ தீராப் பகை, அதனால் சோழ நாட்டு ராஜகுமாரியைப் பாண்டிய நாட்டு வீரன் மணம் முடிப்பது என்பது இயலாத காரியமாக இருந்தது. இருந்தாலும், இவர்களது காதல் தாபம் தணியவில்லை . கடைசியில் ராஜகுமாரியை அவளது கட்டுக் காவலிலிருந்து வீரன் அழைத்துச் சென்று விடுவது என்று ஏற்பாடு செய்து கொள்கிறான். அதற்கிசைகிறாள் இராஜகுமாரியும். குறிப்பிட்ட நாளிலே வீரன் ராஜகுமாரியை உடன் அழைத்துச் சென்று விடுகிறான். செய்தி தெரிந்து விடுகிறது சோழநாட்டு வீரர்களுக்கு. பாண்டிய நாட்டு வீரனை மடக்கி மங்கையை மீட்டுச் செல்ல முனைந்து புறட்படுகிறார்கள் சோழ வீரர்கள். அதற்கெனக் குதிரைகளிலே ஏறிப் பாண்டிய நாட்டு வீரனைப் பிடிக்க வருகிறார்கள். வீரனோ ராஜகுமாரியையும் இழுத்துக்கொண்டே செல்ல வேண்டியிருக்கிறது. அவளாலோ விரைந்து நடக்க முடியவில்லை. ஆதலால் அவளை அப்படியே தன் தோளின் மீது ஏற்றிக்கொள்கிறான். அவனைச் சுமந்து கொண்டே ஓடுகிறான். சோழ நாட்டின் எல்லையைக் கடந்து பாண்டிய நாட்டிற்குள் நுழைந்து விட்டால் சோழநாட்டு வீரர்களால் ஒன்றும் செய்ய முடியாதல்லவா? எல்லை நெருங்குகிறது. அதற்குள் நெருங்கி விடுகிறார்கள் சோழநாட்டு வீரர்கள், குதிரையிலிருந்தே நீண்ட ஈட்டியை ஓடும் வீரளின் விலாவில் பாய்ச்சுகிறார்கள், ஈட்டி பாய்ந்த இடத்தில் ரத்தம் பெருகுகிறது. பாண்டிய நாட்டு வீரனோ பகை அரசரின் வீரர்களோடு போரிட்டு அவர்களையெல்லாம் வெல்லக் கூடியவன்தான். என்றாலும் தன்னுடன் வந்திருக்கும் ராஜகுமாரியைச் சோழநாட்டு மண்ணிலே இறக்சிலிட விரும்பவில்லை. ஆதலால் விரைந்தே ஓடிப்போய் பாண்டிய நாட்டின் எல்லையை