பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 4.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
26. ஆழ்வார் திருநகரி ஆழ்வார்

நேபாளத்தில் கபிலவஸ்து என்ற இடத்தில் சுத்தோதனர் என்று ஓர் அரசர் இருந்தார். அவருக்கு மாயாதேவி என்பவள் மளைவி. இவர்களுக்குப் பிள்ளைாகச் சித்தார்த்தர் பிறந்தார். இந்தச் சித்தார்த்தர் யசோதரையை மணந்தார். ராகுலன் என்ற மகனைப் பெற்றார். இல்லறமாம் நல்லநத்திலே வாழ்ந்த இந்த ராஜகுமாரராம் சித்தார்த்தர் உலகிலுள்ள மக்கள் பினி, மூப்பு, சாக்காடு முதலிய துன்பங்களால் துயருறுவதைக் கண்டு மனம் தளர்ந்தார். பிறவிக் கடலைக் கடந்து இத்துன்பங்களினின்றும் நீங்க வழி எது என்று சிந்திக்கலானார். கடைசியில் ஒரு நாள் இரவு மனைவி மக்கள் எல்லாரையும் உதறி விட்டு அரண்மனையிலிருந்து வெளியேறினார். ஆறு ஆண்டுகள் பல இடங்களில் திரிந்தவர் கடைசியாகக் கயாவுக்கு வந்து அங்குள்ள போதி மரத்தடியில் அமர்ந்தார். அங்குதான் அவர் மெய்யறிலைப் பெற்றார். போதி மரத்தடியிலிருந்து ஞானம் பெற்று உலகுய்ய வழிகாட்டிய இந்தப் பெருமகனே புத்தர். அவர் காட்டிய வழி நிற்பவர்களே பௌத்தர்.

இவரைப் போலவே தென் தமிழ் நாட்டில் ஒரு புளிய மரப் பொந்திலிருந்து ஞாலோபேதேசம் செய்த பெருமான்தான் நம்மாழ்வார். தண்பொருநை நதிக்கரையில், முன்பு குருகூர் என்று பெயர் பெற்ற இன்றைய ஆழ்வர் திருநகரி தலத்திலே காரியார் என்ற சிற்றரசருக்கும் உடைய நங்கைக்கும் திருமகனாய்ச் சடகோபர் தோன்றினார். பிறந்ததிலிருந்தே மற்றக் குழந்தைகளைப் போல் பாலுண்ணல், அழுதல் முதலிய செயல்களின்றிக் கண்மூடி மௌனியாக இருந்தார். இது கண்டு வியப்புற்ற பெற்றோர், சில நாட்கள் சென்றபின் பிள்ளையை எடுத்துக் கொண்டு அவ்வூரில் உள்ள ஆதிநாதர் கோயிலுக்குச் சென்றனர். கோயிலுள் சென்றதும் சடகோபர் மெள்ளத்