பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 4.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

27

குழந்தை வேலாயுதசாமி. இக்கோயில் ஐம்பது வருஷங்களுக்கு முன் புதுப்பிக்கப்பட்டிருக்கிறது.

பழநி ஆண்டவனைப் பாடிய பெருமக்களுக்குள்ளே மிகச் சிறப்பு வாய்ந்தவர் அருணகிரியார் தான்.

பழனம் உழவர் கொழுவில் எழுது
பழப் பழநி அமர்வோனே.

என்று மலைமேல் உள்ள ஆண்டவனையும்,

ஆவல் கொண்டுவிறாலே சிராடவே
கோமளம் பலசூழ் கோயில் மீறிய
ஆவினன்குடி வாழ்வான தேவர்கள் பெருமாளே

என்று ஆவினன்குடி மக்களையும் பாடி மகிழ்ந்திருக்கிறார். பழநியைப் பற்றிக் கந்தர் அவங்காரத்திலும் ஒரு நல்ல பாட்டுப் பாடி இருக்கிறார் அருணகிரியார்.

படிக்கின்றிலை பழநித் திருநாமம்
படிப்பவர் தாள்
முடிக்கின்றிலை முருகா என்கிலை
மூசியாமல் இட்டு
மிடிக்கின்றிலை பரமானந்தம்
மேற்கொள விம்மி, விம்மி,
நடிக்கின்றிலை நெஞ்சமே
தஞ்சம் எது? நமக்கு இனியே.

என்ற பாடலை எத்தனை தரம் வேண்டுமானாலும் பாடிப் பரவலாம்

என்ன, இங்கு சிற்பச் சிறப்புகள் ஒன்றுமே இல்லையா, என்று நீங்கள் கேட்கும் கேள்வி என் காதில் விழத்தான் செய்கிறது. பழங்காலத்துச் சிற்பங்கள் அதிகம் இல்லைதான் என்றாலும், ஊருக்கு மேல்புறமாக ஓடும் சண்முக நதிக்கரையிலே பழநிக்கு வடக்கே மூன்று கல் தொலைவில் ஒரு பெரிய தோப்பினிடையே