பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 4.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

26

வேங்கடம் முதல் குமரி வரை

இந்துக்களே அன்றி முகம்மதியர்களும் குடும்பத்துடன் வந்து சந்நிதிக்குப் பின்புறத்தில் சந்தனக் காப்பிட்டுத் தூபம் காட்டி பாத்தியா ஓதி வணங்கிச் செல்கின்றனர். இப்படி எல்லாம் சர்வ சமய சமரசம் வளர்ப்பவனாகப் பழனி ஆண்டவன் அங்கு நின்று அருள் புரிகிறான் என்றால் அது போற்றுதற்குரியதுதானே? பழனி ஆண்டவருக்கு மாதம் தோறும் திருவிழாக்களும் உண்டு. பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், தைப்பூசம் முதலிய விழாக்களில் எல்லாம் திருத்தேர் - சிறப்பாக அலங்கரிக்கப்பட்டுத் தெருவீதியில் உலா வரும். தங்கத் தேர் ஒன்று ஒவ்வொரு மாதமும் கிருத்திகை தினத்தன்று மலைமீது உள்ள பிராகாரத்திலேயே உலா வரும்.

எல்லாம் சரிதான், நக்கீரர் பாடிய அந்தத் திரு முருகாற்றுப் படையில் வரும் ஆவினன் குடிதான் பழநி என்பார்களே அதைப்பற்றி ஒன்றுமே கூறவில்லையே என்றுதானே நினைக்கிறீர்கள். அந்த ஆவினன் குடிக்கோயில் மலை அடிவாரத்தில் இருக்கிறது. இதுவே ஆதி கோயில். நக்கீரரால் மாத்திரமல்ல, ஒளவையாராலும் சிறப்பித்துப்பாடப் பெற்றது. ஒளவையார் காலத்தில் இதனைச் சித்தன் வாழ்வு என்று அழைத்திருக்கிறார்கள்.

நல்லம்பர் நல்லகுடி
உடைத்து; சித்தன் வாழ்வு
இல்லம் தொறும் மூன்று
எரி உ.டைத்து; - நல்லரவப்
பாட்டுடைத்துச் சோமன்
வழிவந்த பாண்டிய நின்
நாட்டுடைத்து நல்ல தமிழ்

என்று நல்ல தமிழ்ப் பாட்டிலேயே அல்லவா இந்தச் சித்தன் வாழ்வு இடம் பெற்று விட்டது? திருவாவினன் குடிக் கோவிலிலேதான், திருமகள், காமதேனு, சூரியன், நிலமகள், அக்னி முதலிய ஐவரும் தொழுது பேறு பெற்றிருக்கிறார்கள், ஐவருக்கும் கற்சிலைகள் இன்னும் இருக்கின்றன கோயிலில், இங்குள்ள மூர்த்தி