பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 4.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

41

லக்ஷ்மியைப் பாதுகாக்கும் நிலையில் இருக்கிறது. சயனமூர்த்தியைச் சுற்றிக் கருடன், சித்திரகுப்தன், மார்க்கண்டேயர்; பிரமன் எல்லாரும் இருக்கிறார்கள். வான வீதியிலே தேவர்களும் கின்னரர்களும் விரைந்து செல்லும் காட்சி மற்றத் தலங்களிலும் காணக்கிடையாததொன்று. பெருமானின் காலடியில் மதுகைடபர் என்ற அசுரரும், பூமி தேவியும் இருக்கிறார்கள், அன்று பூமிதேவியை மதுகைடபர் தூக்கிச் சென்றபோது ஆதிசேஷன் தன் விஷத்தை அவர்கள் மீது கக்கியிருக்கிறான். அவர்கள் பஸ்மீகரமாகி யிருக்கிறார்கள். பரந்தாமனது கட்டளை இல்லாமலேயே ஆதிசேஷன் தானாகவே விஷம் கக்கியதற்கு வருந்தியிருக்கிறான். அதனாலேயே! அவனைச் சாந்தி செய்யும் கோலத்தில் இந்த அனந்தசயனர் கிடக்கிறார் என்பது புராணக்கதை, இங்குள்ள பெருமாளும் மாமல்லபுரத்து தலசயனப் பெருமாளும் ஒரே கோலத்தவர். ஆம்! மெய்யத்துக் குடைவரையும் மாமல்லபுரத்தைப் போல் பல்லவர் பணிதானே.

இந்த மெய்யத்துப் பெருமானை வணங்கிய பின் மேலே நடந்து அடுத்த கோயிலான சத்தியகிரீசுவரர் கோயிலுக்கு வரலாம். நிரம்ப நடக்க வேண்டியதில்லை. ஒரு சிறு தெருவைத்தான் கடக்க