பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 4.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

77

ராமலிங்கர் பிரதிஷ்டை . இந்த ராமலிங்கர் பிரதிஷ்டை ஒரு சுவையான கதையாயிற்றே. இலங்கையில் இராவண வதம் நிகழ்த்திய ராமனைப் பிரம்மஹத்தி தோஷம் பிடித்துக் கொள்கிறது. அதன் நிவர்த்திக்கு இறைவனைப் பிரதிஷ்டை செய்து பூஜிப்பதுதான் வழி என்பதை அறிகிறான் ராமன். ராமனது ஏவல் கூவல் பணி செய்யத்தான் அனுமன் உடன் இருக்கிறானே. அவனை அனுப்பி நர்மதை நதிக்கரையிலிருந்தே லிங்கம் அமைக்கக் கல் கொண்டு வரச்சொல்கிறான்; சென்ற அனுமன் திரும்பக் காணோம். அதற்குள் பிரதிஷ்டைக்குக் குறித்த நேரம் வந்துவிடுகிறது. ராமனுடன் வந்த சீதாப்பிராட்டி அங்கு கடற்கரையிலிருந்த மணலையே சிவலிங்கமாக்கிக் கொடுக்கிறாள். ராமனும் பூஜையை முடித்துக் கொள்கிறான். பூஜை முடிந்தபின் அனுமன் லிங்கத்துடள் வந்து சேருகிறான். அவனுக்கு ஒரே கோபம், தன் முயற்சி எல்லாம்

ராமேஸ்வரம் கோயில் பிரகாரம்

வீணாய்ப் போய் விட்டதே என்று. சீதை அமைத்த மணல் லிங்கத்தைத் தன் வாலால் கட்டி இழுத்துப் பிடுங்கி எறிந்துவிட முனைகிறான். நடக்கிற காரியமா அது? ஆதிலிங்கம் ஆயிற்றே. அனுமானைச் சமாதானம் செய்ய விரும்பிய ராமன் அவன் கொண்டுவந்த லிங்கத்தையும் பக்கத்திலேயே பிரதிஷ்டை செய்து வைத்து அதனை அனுமத்லிங்கம் என்று அழைக்கிறார். இத்தனை நாடகமும் சுதை