பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 4.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
10. உத்தர கோச மங்கைக்கு அரசு

ஒரு பொருளாதாரப் பேராசிரியர், அவர் ஏற்றிருக்கிற பொருளாதாரப் பகுதியில் பி.ஏ. வகுப்பில் நாற்பது பிள்ளைகள். அதில் பத்துப்பேர் பெண்கள். அவர்களில் ஒருத்தி கமலா. பேராசிரியர் சொல்லும் பொருளாதாரத் தத்துவங்கள் ஒன்றும் அவளுக்குப் புரிகிறதேயில்வை, எப்படியோ உருப்போட்டுப் பூரீக்ஷை எழுதிப் பாசாகிவிட்டாள். பேராசிரியரது பெற்றோர் அந்தச் கமலாவையே தங்கள் மருமகளாக நிச்சயித்து மகனுக்கு மணம் முடித்து வைக்கின்றனர். பேராசிரியர் போதித்த பொருளாதாரத் தத்துவங்கள் விளங்காவிட்டாலும் பேராசாரியரது குடும்பப் பொருளாதாரத்தைத் திறம்பட நிர்வகிக்கத் தெரிந்து கொள்கிறாள் கமலா. பேராசிரியரும் அடங்கி ஒடுங்கி விடுகிறார். இது நானறிந்த குடும்பம் ஒன்றில் நிகழ்ந்த செயல். இதனைத் தூக்கியடிக்கிற வகையிலே இறைவனும் குடும்பம் நடத்தியிருக்கிறார். கதை இதுதான்;

கைலாயத்தில் ஒருநாள் இறைவன் பார்வதிக்கு வேத மந்திரங்களை உபதேசிக்கிறார். அம்மையும் அத்தனை மந்திரங்களையும் ஆர்வத்தோடு கற்றுக்கொள்கிறாள். என்றாலும், அவளுக்கு எத்தனையோ வேலை. புருஷனுக்குச் செய்ய வேண்டிய பணிவிடைகள் இரண்டு பிள்ளைகளைக் கட்டி மேய்க்கும் தொல்லை, இவைதவிர எண்ணற்ற பக்தர்கள் செய்யும் பிராத்தனைகளை உடனுக்குடன் நிறைவேற்றி வைக்கும் பொறுப்பு இருக்கிறதல்லவா? அதனால் வேத மந்திரங்களை ஒழுங்காய் நெட்டுருப் போட்டு, ஞாபகத்திலே வைத்துக்கொள்ள முடியவில்லை. இதுவெல்லாம் தெரிகிறதா இறைவனுக்கு? சொல்லிக் கொடுத்த பாடத்தை ஒட்புவிக்கும்படி கேட்கிறார் ஒரு நாள். அம்மைக்குப் பாடம் எல்லாம் மறந்து விட்டது; ஆதலால் விழிக்கிறாள். உடனே கோபம் வருகிறது வாத்தியாருக்கு. கோபத்தில் சாபமே கொடுத்து