பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 5.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ.மு. பாஸ்கரத் தொண்டைமான்

117

திறந்த வெளியில் சண்டிகேஸ்வரியின் சிலை இருக்கிறது. இந்த சண்டிகேஸ்வரிக்கு தவிடே அபிஷேகம்.

இந்த தவிட்டை கோயிலில் வளர்க்கப்படும் ஆடுகள் நாவால் நக்கி உண்ணுகின்றன. இந்த ஆடுகளையே பின்னர் பகவதிக்கு பலியிடுவது வழக்கம் என்கிறார்கள். இப்படிச் சுற்றிக் கொண்டிருக்கும் போது கோயில் மணி அடிக்கும். சந்நிதிக் கதவைத் திறந்து விட்டதற்கு அறிகுறி இது. உடனே விரைந்து கோயில் வாயிலுள் நுழைந்து, பகவதியின் சந்நிதி சேரலாம்.

பகவதி எட்டுக் கரங்களும், மூன்று கண்களும், கோரப் பற்களும் உடையவளாய் வீற்றிருக்கிறாள். பகவதி திருமுன்னர் - விளக்குகள் நிறைய இருக்கின்றன. இன்னும் யந்திரம், திருவாசி முதலியனவும் வைத்து வழிபடுகிறார்கள். இந்த சந்நிதிக்கு வலப்புறம் ஒரு கருவறை இருக்கிறது. பகவதியின் கருவறையிலிருந்து அதற்கு வாயிலும் இருக்கிறது.

ஆனால் அந்த வாயிலை அடைத்து வைத்திருக்கிறார்கள், வாயிலுக்கு முன் திரு வாசியை வைத்திருக்கிறார்கள். கருவறைக்கு வெளியில் மூடப்பட்டிருக்கும் கோயிலுக்கு விமானம் இருக்கிறது. இந்த மூடப்பட்ட கோயில் உள்ளே ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்த சக்கரம் இருப்பதாகச் சொல்கிறார்கள். அதனுடைய சாந்நித்யம் மிகவும் உக்கிரமாக இருந்ததால் சந்நிதியை