பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 5.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

12

கம்பரைப் பற்றியோ, ஆழ்வார்கள், நாயன்மார்களைப் பற்றியோ, கலிங்கத்துப் பரணி, பாரதி, தேசிக விநாயகம் பிள்ளையைப் பற்றியோ அல்லது கலைகள், சிற்பங்கள் பற்றியோ இவர் பேசினால் பண்டிதர் முதல் பாமரர் வரை எல்லோரும் ரசிக்கிறார்கள், இவரது நடை, பண்டிதர்கள் நடையைப் போல் கடினமானதல்ல. தான் பேசுவது எல்லோருக்கும் புரிய வேண்டுமென்று நினைத்து வெகு அழகாகப் பேசுவார். எது பேசவேண்டும் என்றும், எப்படிப் பேசவேண்டும் என்றும் சிந்தித்துப் பேசுவார். ஆகையால் இவர் பேச்சுக்கள் எல்லோர் மனதையும் கவர்கிறது.

மார்கழி மாதம், திருப்பாவையைப் பற்றியும், திருவெம்பாவையைப் பற்றியும் தினமும் இவரது சொற்பொழிவுகள் தமிழ் நாடு முழுவதும் இருக்கும். வானொலியில் எத்தனை தரம் பேசியிருக்கிறோம் என்பது இவருக்கே நினைவிருக்காது. இருபத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாகவே, தமிழிலும் ஆங்கிலத்திலும் கவிதையைப் பற்றியும், கலையைப் பற்றியும், கோயில்களைப் பற்றியும் பேசி இருக்கிறார். அந்த இருபத்தைந்து வருஷங்களில் இவர் போகாத கம்பர் விழாவே கிடையாது. பட்டி மண்டபம் நடக்கிறதென்றால் அதற்குத் தலைவர் இவர்தான். எங்கு தமிழ் விழா என்றாலும் இவரை முதலில் பார்க்கலாம். கலையைப் பற்றி தைரியமாக முதலில் தமிழில் எல்லோருக்கும் விளங்கும்படி எழுதியவர் இவரே.

இவ்வளவு சொல்கிறீர்களே, இவர் கலெக்டராக இருந்து பணி செய்ததைப் பற்றி எழுதவில்லையே என்று நினைக்க வேண்டாம். நேர்மையும்,