பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 5.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

13

திறமையும், சாமர்த்தியமும் இல்லாவிட்டால், கலெக்டர் ஆபீஸ் குமாஸ்தாவாக ஆரம்பித்து, கலெக்டராக ஓய்வு பெற முடியாது. அப்பணியையும் செவ்வனே செய்து, ஆங்கில ஆட்சியில் இருந்த ஐ.ஏ.ஏஸ் கலெக்டர்களெல்லாம் மெச்சும்படி வேலை செய்திருக்கிறார். இவர் வேலூரில் கலெக்டராக இருந்த போது, தைரியமாக, 'அன்றும் இன்றும் என்று ஒரு நாடகத்தை எழுதி, அதை அப்போது தமிழக முதல்வராக இருந்த காமராஜர் முன்னிலையில் நடித்து, அரங்கேற்றிக் காட்டி முதல் வரது பாராட்டையும் பெற்றிருக்கிறார் என்றால் அதிகம் சொல்வானேன்?