பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 5.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

47

பத்தராவிப் பெருமாளையே சேவிக்கலாம்,, பெருமாளைச் சேவித்த பின் கோயில் உட்பிராகாரத்தை வலம் வந்தால் காணலாம், அழகான சிற்பவடிவங்கள் சிலவற்றை. நீர் மல்கினதோர் மீனாய், ஓர் ஆமையுமாய், சீர் மலிகின்ற தோர் சிங்க உருவாகி கார்மலி வண்ணன் கண்ண மங்கைப் பெருமாள் காட்சிதருகிறான் என்று திருமங்கை மன்னன் பாடுகிறான்.

அந்தப் பெருமானின் பத்து அவதாரத்தையும் நாம் அங்குகாணமுடியாவிட்டாலும் "தாயெடுத்தசிறு கோலுக்கு உளைந்து ஓடித் தயிர் உண்ட வாய் துடைத்த மைந்தனாம்“ கண்ணனை வேணுகோபாலனாகவே காண்கின்றோம் ஒரு மாடக் குழியில். இத்துடன் பூமி தேவியையே காத்தளித்கின்ற வராக மூர்த்தியையும், இரணியன் குடல் கிழித்து உதிரம் உறிஞ்சிய நரசிம்மனின் பயங்கர உருவையுமே பார்க்கின்றோம் அங்கு.

இவர்களோடு சேம மதில் சூழ் இலங்கையர்கோன் சிரமும் கரமும் துணித்த அந்த ஸ்ரீராமனையே சோதண்டம் ஏந்திய கையனாய்க் காண்கிறோம், இன்னுமொரு மாடக்குழியில், இத்துடன் நான் முன்னரே குறிப்பிட்ட கஜேந்திர மோக்ஷக் காட்சியையும் காண்கிறோம். மகிழ்கின்றோம். நம்மைப் போலவே திருமங்கை மன்னனும் இத்திரு உருவைக் கண்டு மகிழ்ந்திருக்க வேணும், இல்லா விட்டால்

இலையார் மலர்ப்பூம் பொய்கை வாய்
முதலை தன்னால் அடர்ப்புண்டு
கொலையார் வேழம் நடுக்குற்றுக். --
குலைய அதனுக்கு அருள் புரிந்தான்.

என்று இந்த கண்ண மங்கைக் காராளனைப் பாட முடிந்திருக்குமா என்ன? இத்தனை சிலைகளையும் தூக்கி