பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 5.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

46

வேங்கடம் முதல் குமரி வரை

வரும் அந்தப் பெருமாளின் கோலம் எல்லாமே உருவாகிறது கல்லில், சிற்பியின் சிற்றுளியால், என்ன வேகம்! என்ன வேகம்! இந்தப் பெருமாளின் வரவிலே என்று எண்ணும் படி செய்து விடுகிறான் சிற்பி. சங்கு சக்கரம் ஏந்திய இரண்டு கரங்கள் போக, இன்னும் இரண்டு கரங்களில் ஒன்று, அபயப்பிரதானம் அளிக்கிறது, மற்றொன்று வரதத்தைத் குறிக்கிறது.

கருடனது உடல் அமைப்பிலே ஒரு கவர்ச்சி, கடவுளின் வடிவிலே ஓர் அழகு எல்லாவற்றையும் உருவாக்கிய கலைஞன் யானை, முதலைகளை செதுக்குவதிலும் நிரம்ப கவனம் செலுத்தியிருக்கிறான். அதனால் உயிருள்ள முதலையையும் உணர்ச்சி மிகுந்த யானையையுமே காண்கிறோம் கல்லுருவில். அப்படி அற்புதமாக ஒரு கல்லில் உருவாகி இருக்கும் சிலையைக் கண்டபின் தான், ஒரே நடிகர் இத்தனையையும் நாம் கற்பனை பண்ணிப் பார்க்கும். அளவில் நடித்துக் காட்டுவது அவ்வளவு அதிசய மில்லை என்று எண்ணத் தோன்றுகிறது.

இந்த அழகான சிலை இருப்பது திருகண்ணமங்கை பக்தவத்ஸலப் பெருமாள் கோயிலில். திருக்கண்ணமங்கை செல்லவேண்டுமானால், திருவாரூருக்குச் செல்ல வேணும். அங்கிருந்து நாலு, ஐந்து மைல் மேற்கே குடவாசல் - கும்பகோணம் போகும் ரஸ்தாவில் போக வேணும். அந்த ரோட்டை விட்டு இறங்கி இன்னும் கொஞ்சம் மேற்கே நகரவும் வேணும். அப்படி நகர்ந்தால் முதலில் தர்சன புஷ்கரணியைத் தரிசனம் பண்ணலாம். குளத்தில் இறங்கிக் குளிக்கத் துணிவில்லாதவர்கள் நீரைத் தலையில் தெளித்துக் கொள்வதுடன் திருப்தி அடைந்து கொள்ளலாம்.

அதன் பின் குடைவருவாயிலைக் கடந்து சென்று அங்கு கோயில் கொண்டிருக்கும் பக்தவத்சலன் என்னும்