பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 5.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

45

கற்பனை பண்ணிக் கதை முழுவதையும் தெரிந்து கொள்ள, ஏன்? உணர்ந்து கொள்ள வேண்டியிருந்தது. குளமாக, யானையாக, முதலையாக, கருடனாக, காத்தற் கடவுளாம் திருமாலாக, எல்லாம் ஒரு நடிகர் மாறி மாறி நடித்ததை எல்லாம் அன்று கண்டு களித்து மகிழ்ந்தேன். இன்றும் அதை எண்ணி மகிழ்கிறேன்.

இதே கலையழகைப் பின்னர்ச் சிற்ப உலகில் நான் கண்ட போது அப்படியே அதிசயித்து நின்றேன். தமிழ் நாட்டில் ஒரு சிற்பிக்கு ஒரு கல் கிடைக்கிறது. கல்லின் அளவோ நாலுக்கு இரண்டு {4அடி x 2அடி). அதன் கனமோ ஒன்றரை அடிதான். இந்தக் கல்லைப் பார்ப்பதற்கு முன், சிற்பி கஜேந்திர மோக்ஷத்தையே ஆம். அந்த அற்புதமான கதையைத் தான் தன் மனக் கண்ணில் கண்டிருக்கிறான்.

உள்ளக் கிழியில் உரு எழுதி வைத்திருந்ததைக் கல்லில் உருவாக்கிக் காட்டவும் முனைகிறான். இருப்பதோ ஒரு சிறு கல். அதில் உருவத்தால் பெரிய யானை, அந்த யானையையே பிடித்து இழுக்கும் முதலை, யானையைக் . காக்க வருகின்ற பெருமாள், அந்தப் பெருமாளைத் தூக்கி வருகிற கருடன் எல்லாம் உருவாக வேண்டுமே என்று கவலைப் படவில்லை சிற்பி. கிடைத்த கல்லிலே பெரும் பகுதியைக் கருடனுக்கும் பெருமாளுக்கும் ஒதுக்கி விடுகிறான்.

அடித்தளத்தில் ஒரு சிறிய இடத்தில் வீறிட்டு அலறும் யானை உருவாகிறது. அந்த - யானையின் காலைப் பிடிக்கும் முதலையுமே இருக்கின்ற கொஞ்ச இடத்தில் உடலை வளைத்துக் கொண்டு நெளிவதற்கு ஆரம்பித்து விடுகிறது. அவ்வளவுதான், அதன்பின் பறந்து வருகின்ற கருடன்மேல் ஆரோகணித்து அவசரம், அவசரமாகவே