பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 5.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

53

அவதாரம் உழவன் செய்யும் திருப்பணியை உருவகப் படுத்துகிறதுதானே. ஆம், பூமிக்குள் இருக்கும் எத்தனை - எத்தனையோ சக்திகளை வெளிப்படுத்தி, மக்களுக்கு உண்ண உணவும் உடுக்க உடையும் அனுபவிக்க மலர் வகைகளையும் அருளுபவன் அவனே அல்லவா? அடடா, என்ன அழகான கற்பனை, இந்த வராக மூர்த்தியை உருவாக்குவதிலே!

இத்தகைய கற்பனையைச் சித்தரிக்க விரும்புகிறார் ஒரு ஓவியர், கொஞ்சகாலத்திற்கு முன் நம்மிடையே இருந்தவர் தாம் அவர். ஆனால் பாவம், அவர் எதைக் கண்டார்? பூமியைக் கண்டாரா? பூமாதேவியைக் கண்டாரா? இல்லை. அவளது அருள் நிறைந்த சக்தியைத்தான் கண்டாரா? அவருக்குத் தெரிந்ததெல்லாம் ஆங்கில மோஸ்தரில் நடத்தப்பட்ட பள்ளிக்கூடங்களில் காணும் பூகோளப் படமும் பூகோள உருண்டையும் தானே!

வராகம் என்றால் என்ன என்று தெரியும், வராக உருவில் பரந்தாமன், பூமியை எடுத்து வந்ததும் தெரியும். உடனே உருவாகிவிட்டது சித்திரம். வராக மூர்த்தியின் மூக்கின் வளைவுக்கேற்ப பூகோளமும் உருண்டிருந்தது பொருத்தமாகப் போயிற்று. பூகோளத்தின் ஒரு பகுதி (Eastern Hemisphere) ரொம்ப ஜோராய் ஜம்மென்று இந்த மூக்கிலே உட்கார்ந்து இருப்பது போலப் படம் உருவாகி விட்டது. பல வண்ணங்களில்