பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 5.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ.மு. பாஸ்கரத் தொண்டைமான்

61

துறைப் பெருமான் காதில் விழுந்ததாகத் தெரியவில்லை. காரணம் கோயிலில் வேதம் ஓதும் மாணவர்கள் வேதத்தை உச்சஸ்தாயியிலே ஓதிக் கொண்டிருக்கிறார்கள். இந்த ஒலியை மீறிக்கொண்டு சம்பந்தர் பாடல் இறைவன் காதில் விழுவது கஷ்டத்தானே. இதை சம்பந்தருமே உணர்கிறார் திரும்பவும்.

சடையார் சதுரன் முதிரா மதிசூடி
விடையார் கொடி ஒன்று! உடை எந்தைவிலோ
கிடைஆர் ஒலிஒத்து: அரவத்து இசைக்கிலனை
அடையார் பொழில் அன்பில்! ஆலந்துறையாரே.

என்றே பாடுகிறார். பாடல் இறைவன் காதில் விழுந்து விடுகிறது. வந்திருப்பவர் ஆளுடைய பிள்ளையார். அவர் அக்கரையில் நின்று பாடுகிறார். என்பதை உணர்கிறார். பாட்டை அனுபவிக்கவே முனைந்து விடுகிறார். இந்த நிலையில் தன் பக்கல் இருந்த மூத்த பிள்ளை, பிள்ளையாரோ பாட்டைக் கேட்காமல் எங்கோ கவனமாக . முகட்டைப் பார்த்துக் கொண்டிருக்கிறார். (அன்றைய பள்ளிப்பிள்ளையைப் போலவே தான் வாகனமாம் மூஞ்சூாறு வளையில் நுழைவதைக் கவனித்துக் கொண்டிருந்தாரோ என்னவோ} இதைப் பார்த்த அந்தப் பரம ரஸிகரான பெருமான்.

தன் பிள்ளையின் காதைப் பிடித்துத் திருகி, “கேளடா நம்ம சம்பந்தன் பாடுகிறான் அக்கரையிலிருந்து" என்று சொல்கிறார். அவ்வளவுதான் பிள்ளையாரும் அப்போதே செவிசாய்த்துப் பாடல்களை கேட்க முனைந்து விடுகிறான். தந்தையும் மகனுமே ஞான சம்பந்தரின் மற்ற ஒன்பது பாடல்களையுமே நன்கு அனுபவித்திருக்க வேண்டும்.

இத்தனையும் உண்மையாய் நடந்ததா என்று கேட்காதீர்கள். நடந்ததோ - நடக்கவில்லையோ எனக்குத் தெரியாது. ஆனால் இன்று, அந்தத் கோயிலில்