பக்கம்:வேட்டை நாய்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வேட்டை நாய்

9


மண்டலத்தில், ஒரு பெரிய படையின் தலைவராக இருந்தார், ஸெதாந்தாவின் அப்பா. போர் மிகவும் கடுமையாக நடந்து கொண்டிருந்த போது, உடனே ஒரு பெரிய படையுடன் புறப்பட்டு வரவும், என்று ஸெதாந்தாவின் அப்பாவுக்கு அரசரிடமிருந்து உத்தரவு வந்தது. மனைவியையும், மகனையும் அங்கேயே விட்டுவிட்டு, ஒரு பெரிய படையுடன் புறப்பட்டார், அப்பா.

எதிரிகளை மிகவும் கடுமையாக எதிர்த்துப் போரிட்டார்கள். வெற்றியோ தோல்வியோ யாருக்கும் கிடைக்கவில்லை. எதிரிகளை இவர்கள் தாக்குவதும், இவர்களை எதிரிகள் தாக்குவதுமாகப் போர் நடந்துகொண்டே இருந்தது.

ஒரு நாள் ஸெதாந்தாவின் அப்பா எதிரிகளை எப்படியும் முறியடித்து விடுவது என்று தீர்மானித்துத் தம்முடைய படையுடன் முன் நோக்கிச் சென்றார்; வீரமாகப் போரிட்டார். ஆனால் , அவர் உயிருடன் திரும்பவில்லை; போர்க் களத்திலே இறந்துவிட்டார்! வீரசொர்க்கம் அடைந்தார்.

அவர் இறந்த செய்தியைக் கேட்டதும் ஸெதாந்தாவும், அவன் அம்மாவும் அடைந்த துயருக்கு அளவே இல்லை. வாடினார்; வருந்தினார்; கண்ணிர் விட்டனார்; கதறி அழுதனார்.

ஆனால், இது நடந்து இப்போது இரண்டு ஆண்டுகள் கழிந்துவிட்டன. போரில் எதிரிகள் முறியடிக்கப்பட்டனார். ஸெதாந்தாவின் மாமா வெற்றிமாலை சூடி வீடு திரும்பினார்.

போர் நடந்த காலத்தில் நாட்டு மக்களின் நலத்தை அவரால் கவனிக்க முடியாமல் போய்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேட்டை_நாய்.pdf/11&oldid=499940" இலிருந்து மீள்விக்கப்பட்டது