பக்கம்:வேட்டை நாய்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

46

வேட்டை நாய்

 யாரால் இருக்க முடியும்? யானையால் கூட இருக்க முடியாதே” என்று கோணல் வழக்குப் பேசினார், கொப்பாட்டும்.

பத்தாவது படகோட்டி எவ்வளவோ சொல்லிப்பார்த்தான். பலன் இல்லை; உடனே, மற்றப் படகோட்டிகள், “ஏண்டா, சொன்னால் கேட்டால்தானே! ஏன் பந்தயத்திற்குப் போனாய்?” என்றார்கள.

பத்தாவது படகோட்டிக்கு வெட்கமாகப் போய்விட்டது. பேசாமல் எழுந்து வெளியே வந்துவிட்டான். வரும்போதே கொப்பாட்டுமுக்கு எப்படியாவது புத்தி கற்பிக்க வேண்டும் என்று அவன் எண்ணினான்.

சிறிது நேரம் யோசித்தான்.

பிறகு, “நான் இதில் தோற்றுப்போனது உண்மைதான். இப்படி எத்தனையோ தடவைகள் நான் தோற்றுப் போயிருக்கிறேன். ஆனாலும், ஒரே ஒரு விஷயத்தில் மட்டும் என்னைத் தோற்கடிக்கவே முடியாது!” என்று மற்றப்படகோட்டிகளிடம் சப்தம் போட்டுக் கூறினான்.

“என்ன! முடியாதா? அது என்ன விஷயம்?” என்று கொப்பாட்டும் ஆத்திரத்துடன் கேட்டார். 
“இரண்டு நாள் முன்பு, நான் பன்றிக் கறி வறுவல் செய்திருந்தேன். அது எப்படி இருந்தது? அதேபோல் அரைமணி நேரத்துக்குள் வறுவல் செய்ய உங்களால் முடியுமா? முடியவே முடியாது!"
“ஏன் முடியாது? என்ன பந்தயம்!”
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேட்டை_நாய்.pdf/48&oldid=502563" இலிருந்து மீள்விக்கப்பட்டது