பக்கம்:வேட்டை நாய்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

56

வேட்டை நாய்


மறுநாள் காலை நேரம். பாத்திமா தங்கக் காப்பு ஒன்றை எடுத்துக்கொண்டு கடைவீதிக்குச் சென்றாள். அங்கு அவள் அதை விற்கப் போகும் சமயத்தில், அரண்மனைச் சேவகன் ஒருவன் பார்த்துவிட்டான்! உடனே, அவள் அருகிலே வந்து காப்பை வாங்கிப் பார்த்தான். அதில் அரண்மனை முத்திரை இருந்தது. அந்த இடத்திலேயே பாத்திமா கைது செய்யப்பட்டாள்.

அவளை அடித்து உதைத்துக் கேட்டார்கள். அவள் உண்மையைக் கூறிவிட்டாள். அரண்மனையில் வேலைபார்க்கும் ஹாஸன்தான் இதற்குக் காரணம் என்பது தெரிந்தது. உடனே ஹாஸனையும் கைது செய்தார்கள். அவர்களுடைய வீட்டைச் சோதனை செய்தார்கள். அரண்மனைச் சாமான்கள் அங்கே ஏராளமாக இருந்தன!

உடனே, அங்கிருந்த பொருள்கள் எல்லாவற்றையும் சேவகர்கள் எடுத்துக்கொண்டார்கள்.ஹாஸனையும், பாத்திமாவையும் அரசன் முன் கொண்டுவந்து நிறுத்தினார்கள்.

இதற்குள், இந்தச் செய்தி ஊரெங்கும் பரவி விட்டது. கடைக்காரர்களும், பாத்திமாவின் உறவினர்களும் ஆத்திரப்பட்டார்கள். எல்லோரும் உடனே அரண்மனைக்கு ஓடிவந்து நடப்பதைக் கவனித்தார்கள்.

ஹாஸனும், பாத்திமாவும் செய்த குற்றத்தை அரசன் தீர விசாரித்தான். முடிவில் தீர்ப்புக் கூற ஆரம்பித்தான்.

“நீங்கள் கடைக்காரர்களை ஏமாற்றிப் பொருள் சேர்த்தீர்கள்.இது முதல் குற்றம். இதற்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேட்டை_நாய்.pdf/58&oldid=502604" இலிருந்து மீள்விக்கப்பட்டது