பக்கம்:வேண்டும் விடுதலை.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

123

கூடாது."பூவராகவன்’ என்றால் நிலப்பன்றி என்று பொருள் தெரிந்த எந்தத் தந்தையும் அப்பெயரைத் தம் மகனுக்கு ஆசையுடன் வைப்பாரா? பேராசிரியை ஒருவர் தம்பெயரை மண்டோதரி என்று வைத்துக்கொண்டிருக்கின்றார். அதன் பொருள் தெரிந்தால் அப்படி வைத்துக்கொள்ள மாட்டார்கள். ஆரியன் அவனுடைய வடமொழியைக் கருவியாகக் கொண்டு நம்மை, அடிமைப்படுத்தினான். அவன்தான் 'கல்வி விஸ்தரிப்பு’ என்று எழுதுகிறான் என்றால், 'விடுதலை'யிலும் அப்படித்தானே எழுதுகிறார்கள். அவன் எவனாவது தப்பித்தவறித் தலைப்புகளில் ஒன்றிரண்டு தமிழ்ச் சொற்களைக் கையாண்டாலும், 'விடுதலை' யில் அதுகூட வருவதில்லையே! 'நாத்திக”த்தில் எழுதுகிறான், ‘மந்ரி’ என்று! ஆங்கிலத்தில் ஓர் எழுத்துப் போனால் ஒத்துக்கொள்வானா? தமிழன் தான் 'சூத்திர' னென்றால், தமிழுமா அப்படி? குமுகாய இழிவைப் பேசுவதென்றால் எவ்வளவோ இருக்கின்றன. அதற்குத் தனிக் கூட்டங்கள், மாநாடுகள் போட வேண்டும்.”

'பார்ப்பான் வேண்டாம்' என்று சொல்லிவிங்டடுத் தினமணியை விடத் தாழ்வாக விடுதலையில் 'வடசொற்' கலந்து எழுதுகிறார்கள். மிகவும் வருந்துகிறேன். (இப்போது கூட்டத்தில் இருந்த ஒருவர் எழுந்து "தீர்மானத்தைச் சொல்லவில்லையா? என்றார். அதற்குப் பாவலரேறு அவர்கள், தீர்மானம் சொல்லுவேன். மாநாட்டுக்கு வந்திருக்கிறீர்கள் முதலில் பேசுவதை முழுவதும் கேளுங்கள் : தீர்மானம் அப்புறம் சொல்வேன்’ என்று சொல்லி விட்டுத் தொடர்ந்து பேசினார்கள்)’ மன்னார்குடியில் 'கிசான் ஊர்வலம்' என்று கிசான் என்பது இந்திச் சொல் என்று நினைத்துக்கொண்டு எழுதுகின்றனர். மன்னார்குடியில் கிசான் என்னும் சாதி இருக்கிறதா? கிழான் என்றால் உழவன், கிழான் என்பதையே அவன் கிசான் என்று சொல்லிக் கொண்டு அது இந்தி என்று பெருமைப்படுகிறான். ‘உழவர்கள் போராட்டம்’ என்று ஏன் போடக்கூடாது? வேண்டுமென்றே இந்தி, வடமொழிச் சொற்களைக் கலந்து எழுதுகின்றனர். அவர்களுடைய இன உணர்வு அப்படி அந்நிலை நம்மிடம் இருக்கலாமா?

பெரியாரை நாம் எதிர்க்கவில்லை. பெரியாரின் பகுத்தறிவில் திருத்தம் செய்கிறோம்; அவ்வளவே, பெரியாரைத் தி.க. வினர் கொண்டாடுவதைவிட 100 மடங்கு நாங்கள் கொண்டாடுகின்றோம். பெரியார் இல்லை என்றால் இன்று இந்தக் கூட்டம் இல்லை. அவர் இல்லையென்றால் இந்த (ஒலிபெருக்கி முதலிய) க் கருவிகள் இங்கு வந்திரா. எல்லாம் வடநாட்டோடு நின்று போயிருக்கும். அவரைப்,