பக்கம்:வேண்டும் விடுதலை.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

208

வேண்டும் விடுதலை

'அனைத்து வல்லரசுகளின் கொள்ளைகளைக் குழிதோண்டிப் புதைக்கவும், அரசு - தரகு முதலாளியத்தின் மற்றும் அதிகார வகுப்பின் கொட்டங்களை ஒழிக்கவும், சாதிய - நிலக்கிழமை அடிமைத்தனத்திற்கு முடிவு கட்டவும், உண்மையான மக்கள் குடியாட்சியை அமைத்திடவும், தமிழக மக்களின் விடுதலையைக் குறிக்கோளாகக் கொண்டுள்ளது இக் கூட்டணி.

'அவ்வகையில் இந்தியாவில் வாழும் பிற தேசிய இனங்களின் புரட்சி வழி விடுதலைக்குச் செயல் வடிவமும் ஆதரவும் அக் கூட்டணி நல்கிடும். மற்றும் உலகில் போராடும் அனைத்து மக்களின் உரிமைப் போராட்டங்களுக்கும் 'தமிழக மக்கள் விடுதலைக் கூட்டணி' பக்கத் துணையாக நிற்கும்.

கூட்டணி வெளியிட்டுள்ள விரிவான நான்கு பக்கமுள்ள இயக்க அமைப்பின் அறிவிப்பு அறிக்கையில், இவ்வியக்கம் எதற்காகத் தோற்றுவிக்கப் பெற்றது என்பதற்குப் பலவாறான மிக விளக்கமான காரணங்கள் தெளிவாகக் கூறப்பெற்றுள்ளன.

இப்பொழுதைய நிலையில் இந்தியா ஒரு சிறைக் கூடமாக உள்ளதென்றும், தமிழகத்தின் சிற்றூர்ப்புறங்கள் வல்லரசுகளின்; பெரும் நிலக்கிழார்களின் வேட்டைக்காடாக எவ்வாறு ஆக்கப்பட்டுள்ளனவென்றும், தமிழக மக்களின் வேலைவாய்ப்பைப் பெருக்கவும், முறையான வேளாண்மையை வளர்க்கவும், குடியிருப்பு, உடை, உடல்நலம், கல்வி போன்ற அடிப்படைத் தேவைகளில் தன்னிறைவு அடையவும், இங்குள்ள வளங்கள் அனைத்தையும் பெருக்கிடும் வகையிலும், தொழில் திட்டங்கள் அமையாமல், எவ்வாறு அவை வல்லரசு மற்றும் முதலாளிய நாடுகளுக்கும், இந்தியப் பெரும் தரகு முதலாளியக் கும்பலுக்கும், அதிகார வகுப்பிற்கும், பெரும் நிலவுடைமையாளர்களுக்கும் கொள்ளையடிப்பதற்கே வழி வகையாக உள்ளன என்றும், இக்கால் இந்தியா கடைப்பிடிக்கும் வாணிகக் கொள்கை, எப்படி இந்தாட்டை வல்லரசுகளிடம் அடகுவைத்துள்ளது என்றும், இங்குள்ள கெடுக்கும் கல்விமுறை; எப்படி, இங்குள்ள ஏழை மக்களிடம் தாழ்வுணர்ச்சியையும், இயலாமையையும், அடிமைத் தனத்தையும் வளர்த்து வருவதுடன், மேட்டுக்குடியினரிடையே ஒட்டுண்ணித்தனத்தையும் நாட்டு நலனற்ற தந்நலத்தையும், கோழைத்தனத்தையும் வளர்ப்பதற்கே அமைக்கப்பட்டிருக்கின்றது