பக்கம்:வேண்டும் விடுதலை.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

31



 


பிரிவினை நோக்கித்
தள்ளப்படுகிறோம்


“சீனம் மீண்டும் புகைந்து கொண்டுள்ளது ; பாக்கித்தான் மறுபடியும் குமுறிக் கொண்டுள்ளது” என்று செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. அவற்றைத் தொடர்ந்து இனி இந்திய அரசின் எச்சரிக்கைகள் ஒன்றன்பின் ஒன்றாக வெளிவந்து கொண்டிருக்கும். எச்சரிக்கைகளைத் தொடர்ந்து மீண்டும் பல புதிய சட்டங்கள் இந்திய ஒருமைப்பாட்டை வலுவுடையதாக்கும்; கை விடப்பட்ட பழைய சட்டங்கள் மீண்டும் புதுப்பிக்கப்பெற்று நடைமுறைக்கு வரும். இவற்றிற்கிடையில் "மக்கள் பசி பஞ்சத்தையும், பிற சிக்கல்களையும் பாராது, இந்திய நாட்டு ஒருமைப்பாட்டில் நம்பிக்கை வைக்க வேண்டும்" என்பது போன்ற வேண்டுகோள்கள் இங்குள்ள அமைச்சர்கள், தலைவர்கள், தொண்டர்கள் என்பவர்களின் வாய்களிலிருந்து அன்றாடம் வெளிவந்து கொண்டே இருக்கும். இப்படிப் பல மாதங்கள் வரலாற்றில் கழியும். மீண்டும் அமைதி; அதைத் தொடர்ந்து சலசலப்பு; என்ற படி இந்திய அரசியல் நாடகம் நடத்தப் பெற்று, அதில் ஒருமைப்பாட்டு நாட்டியம் ஆடப்பெற்று வருகின்றது. இந்நாடகத்திற்குள் நாடகமெனப் பீகார் உணவுப் பஞ்சம், மராட்டியத்தில் உள்ள சிவசேனை இயக்கம், அப்துல்லாவின் விடுதலை வேட்கை, சீக்கியரின் தனி நாட்டுக் கோரிக்கை, நாகர்களின் புரட்சிப் போராட்டம், காசுமீரத்தின் அவிழ்க்க முடியாத சிக்கல்,