பக்கம்:வேண்டும் விடுதலை.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

46

வேண்டும் விடுதலை




 



இந்தியாவின் அரசியல் வீழ்ச்சியும்
தமிழனின் விடுதலை எழுச்சியும்!


ந்தியக் குடியரசு வரலாற்றிலேயே இதுவரை ஏற்பட்டிராத பெரியதோர் அரசியல் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதை இன்று நாட்டைப் பற்றியும் மக்களைப் பற்றியும் எண்ணிக் கொண்டிருப்பவர் அத்தனைப் பேரும் உணர்ந்து வருந்துகின்ற நேரம் இது. இந்திய அரசியல் அமைப்பில் வலிந்ததும் மிகப் பெரியதுமான பேராயக் கட்சியில் தாய்ச்சுவரிலேயே வெடிப்பு கண்டுள்ளது! அடிமரமே பிளவுபட்டுள்ளது. இப் பிளவு அதிகாரச் சார்பினது மட்டுமன்றிக் கொள்கைச் சார்பினதுமாகும் என்று இருதரப்பினரும் பன்னிப்பன்னி உரைத்து வருகின்றனர். கட்சித்தலைவரும், ஆட்சித்தலைவரும் தங்களின் கட்சியை மட்டுமன்றி மக்கள் கூட்டத்தையே கூறுபோட்டுப் பிரிக்கத் தொடங்கிவிட்டனர். பிரிக்கத் தொடங்கியதோடமையாமல் தம்தம் பங்குக்கு வலிவு, மெலிவுகளையும் எடை போடத் தொடங்கிவிட்டனர். ஒற்றுமை என்றும் ஒருமைப்பாடு என்றும் பேசிய கட்சி மேலாண்மையும், அதிகாரமும் இன்று ஒற்றுமை குலைந்து ஒருமைப்பாடு சிதைந்துள்ள நிலைக்கு வந்துவிட்டன. மக்களைத் திருந்த வேண்டும் என்று வேண்டிக்கொண்டவர்கள் மக்கள் திருத்தியும் திருத்த முடியாத அளவு இழிந்துவிட்டனர். அமைப்பும் அதிகாரமும் ஒன்றை யொன்று அழிக்கத் தொடங்கிவிட்டன. கணவனும் மனைவியுமாக இயங்கவேண்டிய கட்சியும், ஆட்சியும் பிரிவினை மனப்பான்மையுடன் தம்முள்