பக்கம்:வேண்டும் விடுதலை.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

51

சந்திரகுப்தன் ஆரிய இனவழிப்பாட்டுக்காரன்,'நந்தன்' என்னும் அந்த சைசு நாக இனத்தின் கடைசிப் பேரரசன் மிகவும் ஆற்றல் வாய்ந்தவன்தான். அவனிடம் இருபதினாயிரம் குதிரைப் படைகளும், இருநூறாயிரம் காலாட் படைகளும், இரண்டாயிரம் தேர்ப்படைகளும், நான்காயிரம் யானைப் படைகளும் இருந்தன. அவனுக்கு அக்காலத்திருந்த தென்னக அரசர்களின் துணையும் இருந்ததாக வரலாறு உரைக்கின்றது. அத்தகைய வல்லானை, பேரரசனை, அவன் ஆரியர்களிடம் அடங்கவில்லை, மாறாக அவர்களை அடக்கியாண்டான். என்னும் ஒரே காரணத்திற்காக, சந்திரகுப்தன் என்னும் ஓர் அறியாச் சிறுவனைக் கொண்டு சூழச்சியால் வீழ்த்தியவன் ஓர் ஆரியப் பார்ப்பனன். அவன்தான் “விஷ்ணுகோபன்” அவன்தான் பிற்காலத்தில் 'சாணக்கியன்’ என்று தன் பெயரை மாற்றிக்கொண்டவன். அவன்தான் "கௌடில்யன்” அவன் எழுதிய அர்த்தசாத்திரத்தின் இறுதியில் காணப்படும் வரி வரலாற்றுப் புகழ்பெற்றது. அஃது இது. ("ஆரியர்க்கு வந்த) கொடுமைகளிலிருந்து புனித ஏடுகளையும் (சாத்திர புராணங்களையும்), போர் நூல்களையும் (ஆரியன் தந்திர நூல்களையும்) (ஆரியரை எதிர்க்கும்) நந்தரின் வயமாகிவிட்ட நாட்டையும் எவன் காப்பாற்றினானோ, அவனால் (அந்த விஷ்ணுகோபனால்) இந்த (அர்த்த) சாத்திரம் (புனிதநூல்) இயற்றப்பட்டது.”

(இந்திய வரலாறு: வின்சென்ட் ஏ. சுமித் : பகுதி.1, பக். 168)

அத்தகைய சூழ்ச்சியும் வஞ்சமும் கரவும் நிறைந்தவர்களாகியப் பார்ப்பனர்களும். அவர்களைச் சுற்றியுள்ள ஆரிய வெறியர்களும் அவர்களினத்தில் வந்த பெண்ணொருத்தியின் தலைமையைப் பார்ப்னர்களும் எவ்வாறு முட்டுக்கொடுத்துத் தாங்குகின்றனர் என்பதைத் தன்னுணர்வும் தன்மானமும் தன்னாண்மையும் மிக்கவர்கள் நன்கு அறிவர். பதவிப்பித்தர்களும், அதிகார மயக்குற்றவர்களும் கவலைப்படார். மறைந்த அறிஞர் அண்ணாவின் “ஆரியமாயை” நூலின் கருத்துகளை அவர் மூளையிலிருந்து மறைந்து போகுமாறு அல்லது செயலற்றுப் போகுமாறு செய்தவர்கள் ஆரிப்பார்ப்பனர்கள். இல்லையானால் அதுபோன்ற ஒரு நூலாசிரியரை ஆட்சிக்குக் கொணர்ந்த பயனை அந்த நூல் பெற்றிருக்க வேண்டும். வெளிப்புடையாகச் சொன்னால் அவர் காலத்தில் நம் குமுகாயக் கொள்கைக்கு உலை வைக்கப்பட்டது. இக்கால் நம் அரசியல் கொள்கையே ஆட்டம் கண்டுள்ளது. பக்தவத்சலமும் சுப்பிரமணியமும் முழு ஆரிய அடிவருடிகள் என்பதை வரலாற்றிலிருந்து எந்த நிலையிலும் அழித்துவிட முடியாது. அவர்கள்