பக்கம்:வேண்டும் விடுதலை.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

64

வேண்டும் விடுதலை

திராவிட நாட்டுப் பிரிவினைத் தீ கொழுந்துவிட்டு எரிந்த அந்த நிலையில் அறிஞர் அண்ணா முன்னறிவுடன் ஒரு தவற்றைக் செய்யாமலிருந்திருப்பபாரானால், இந்நேரம் தமிழர்கள் தனித்தமிழ்க் கொடிபறக்கும் தன்னுரிமைத் தமிழ் நிலத்தில் வாழ்ந்து கொண்டிருப்பர்; தம் நிலையிலும் பெருத்த முன்னேற்தைக் கண்டிருப்பர்.

ஆனால் தமிழர் இனத்தின் மறுமலர்ச்சி வரலாற்றில் ஏனோ தெரியவில்லை, இப்படியொரு சறுக்கல் ஏற்பட்டு விட்டது. அன்று ஏற்பட்ட சறுக்கலுக்குப் பின் கழுதை தேய்ந்து கட்டெறும்பாகி அதுவும் தேய்ந்து சிற்றெறும்பாகியதைப் போல் திராவிட நாட்டு விடுதலை முழக்கம், தமிழ்நாட்டு விடுதலை முழக்கமாகத் தேய்ந்து இக்கால் மாநிலத் தன்னாட்சிக் கொள்கையில் வந்து நின்று கொண்டுள்ளது. இனி இந்தச் சிற்றுெம்பும் கூட மேலும் தேய்ந்து ஒரேயடியாக இல்லாமல் போய் விடுமோ என்று எண்ணும் அளவிற்கு, அக்கொள்கைக்குப் பல விளக்கவுரை, விருத்தியுரைகள் சொல்லப் பெற்று, இறுதியில், “நாங்கள் கேட்பது நாட்டுப்பிரிவினை அன்று; அதிகாரப் பிரிவினையேயாகும்” என்று கருத்துரை கூறப்பெறுகின்றது. இனி, இன்னுஞ் சில ஆண்டுகள் போகுமானால் இக்கொள்கையும் போய், நாங்கள் கேட்பது அதிகாரப் பிரிவினை கூட அன்று வருமானப் பிரிவினைதான் என்று முடிவுரை கூறும்படி ஆனாலும் ஆகலாம். அதனால்தான் எதற்காகவோ தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்கள் தம் தோளில் சுமக்கப்படாதென்று கூறுகின்ற தன்னாட்சிக் கொள்கைளை, அஃதாவது பச்சையாகச் சொன்னால் பிரிவினைக் கொள்கையை (பிரிவினைத்தடைச் சட்டம் நடைமுறையில் உள்ளதென்பது எனக்குத் தெரியும்) தாம் அடிக்கடி போய் வருகின்ற வெளி நாட்டில் எங்காகிலும் அல்லது பறந்து வரும் வழியில் உள்ள கடல் நீரில் எங்காவது தூக்கியெறிந்து விடாமல், எங்கள் தோள்களின் மேல் இறக்கி வைத்துவிட்டு, அச்சமின்றி எங்கும் எவரிடத்தும் எதற்காகவும் சொற்கோட்டமும் உடற்கோட்டமுமின்றிப் போய் வரலாம். என்று வறிக்கொள்ள விரும்புகின்றோம். இந்நிலையில் உயர்திரு. கலைஞர் அவர்களை நான் ஏதோ பகடி பண்ணுவதாக எண்ணிக் கொள்ளக் கூடாது. உண்மையிலேயே சொல்கின்றேன் அவருக்கிருக்கும் பொறுப்பு பெரிது. மேலும் இதுவரை ஆற்றிய பணியும் (!) மிக மிகப் பெரிது அவருக்கு மேலும் பல திறமைகள் இருக்கலாம்! ஆனால் அவற்றை யெல்லாம் செயற்படுத்த நேரமிருக்குமோ இருக்காதோ, எதற்கும் இந்தப் பொறுப்பை அவர் எங்களிடம் ஒப்புவித்துவிட நேரடியாகவே வேண்டிக் கொள்கிறேன். “வேறு