பக்கம்:வேத வித்து.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிராம்மணனாகப் பிறந்தவன் வேதாத்தியயனம் செய்வது முக்கியம். வேதம் தெய்வத்தின் சுவாசம். அதை ஒரு நாளும் மறக்காதே! நேற்று இங்கே ஆசிரமத்தில் வேதத்தின் பெருமைகள் பற்றி சுவாமிஜி ஒருவர் ரொம்ப அழகாகப் பேசினார். வேதம் ஒதுகிறவன் தினமும் அதை அப்யாசிக்க வேண்டும். எப்படி ஒரு மருந்தை உபயோகிக்காமல் கொஞ்ச நாள் வைத்திருந்தாலும் அதன் வீரிய சக்தி குறைந்து விடுகிறதோ, அப்படியே வேதத்தை அப்யாசம் பண்ணாமலிருந்தாலும் அந்த மந்திரங்களின் சக்தி குறைந்துவிடும்' என்று சொன்னார். இப்படிக்கு, பரசு தீட்சிதர். கண்களில் கண்ணிர் தளும்ப கடிதத்தை மடித்துப் பைக்குள் வைத்துக்கொண்டான். அடுத்தபடியாக திருக்குறள் புத்தகத்தை எடுத்துப் புரட்டினான். பாகீரதி அதற்கு அழகாக அட்டை போட்டு வைத் திருந்ததைப் பார்த்தபோது 'எதுக்கு இந்த அட்டை? அவசிய மில்லையே!' ஒட்டப்பட்டிருந்த அட்டையை மெதுவாகப் பிரித்தான் அதிலிருந்து பத்து ரூபாய் கோட்டுகள் மூன்று கீழே உதிர்ந்தன. கல்லவேளை! கிட்டா பார்க்கவில்லை. - 'மூர்த்தி கொஞ்சம் இங்கயே இருக்கயா? இதோ உள்ளே போய் கொஞ்சம் சர்பத் கொண்டு வந்துடறேன்' என்று சொல்லிவிட்டுப் போனவன் இன்னும் வரவில்லை. அட்டையை முழுதாகப் பிரித்தபோது உள் பக்கத்தில் வாடிப்போன மல்லிகைப் பூ ஒன்று ஒட்டிக் கொண்டிருந்தது. அதன் கீழ், 'மூர்த்தி உனக்காக நான் இந்தப் பூவைப்போல் வாடிக் கொண்டிருக்கிறேன்.' என்று எழுதி கையெழுத்திட்டிருந்தாள் பாகீரதி. 敬 102

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேத_வித்து.pdf/104&oldid=918591" இலிருந்து மீள்விக்கப்பட்டது