பக்கம்:வேத வித்து.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ല-്ക്കേ போன கிட்டா சர்பத் கொண்டு வந்தான். "இக்தா, ஐஸ் போட்டிருக்கேன், குடி! இந்த வெய்யிலுக்கு 'ஜில்"லுனு இருக்கும்' என்றான். பரதேசிக்கோலம் நெருங்கி வந்து கொண்டிருப்பதை நாயன ஓசை அறிவித்தது. காசி யாத்திரை கிட்டத்துல வந்துடுத்து. மாப்பிள்ளை வாசலுக்கு வரப் போறார். ஆர்த்தி, ஆர்த்தி!' என்று உரத்த குரலில் அவசரப்பட்டார் சாஸ்திரிகள். 'முர்த்தி ஆபீஸ் போறவாளுக்காக இப்பவே ஒரு பந்தி போடப்போறா. காம அந்தப் பக்திலேயே உட்கார்ந்துடுவோம்,' என்றான் கிட்டா. "முகூர்த்தம் முடிஞ்சப்புறம் சாப்பிடலாமே!" என்றான் முர்த்தி "மணி பதினொண் ணாயிடும். அது வரைக்கும் பசி தாங்காது. அத்தோட முதல் பந்தி சாப்பாடுதான் ஜோரா யிருக்கும். எப்பவும் பந்திக்கு முந்திக்கனும்; தெரிஞ்சுக்கோ' என்றான் கிட்டா, இருவரும் பந்தியில் போய் ஒரு மூலையாக உட்கார்ந்து கொண் டார்கள். - 1ణ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேத_வித்து.pdf/105&oldid=918593" இலிருந்து மீள்விக்கப்பட்டது