பக்கம்:வேத வித்து.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வண்டி மீது ஒட்டப்பட்டிருந்த போஸ்ட்டர் தஞ்சைக்கு கேரள சர்க்கஸ் விஜயம்' என்று சொல்லிற்று. சத்திரத்துக்குள் போனபோது அங்கே மஞ்சு யாரோ ஒரு கேரளாக்காரனுடன் பேசிக் கொண்டிருந்தாள். பார்வைக்கு சர்க்கஸ்காரன் போலிருந்தான். அழகாக, அரும்பு மீசையுடன் ஒரு கிர்வாகிக்குரிய மிடுக் குடன் காணப்பட்டான். மஞ்சுவின் திறமை பற்றி கேள்விப்பட்டு அவளைத் தன் னுடைய கம்பெனியில் சேர்த்துக் கொள்வதென்ற நோக்கத்தோடு வந்திருந்தான். தன் கம்பெனியிலுள்ள வசதிகள் பற்றியும் கட்டுப்பாடுகள் பற்றியும் மஞ்சு மயங்கிப் போகும் அளவுக்குப் பேசிக்கொண்டிருந்தான். வெய்யில் மழையில் தெருத் தெருவாக முட்டையைத் தூக்கிக்கொண்டு அலையறது ஒரு பொழைப்பா! சர்க்கஸ்ல சேtந்தா கெளரவமா வாழலாம். உங்கப்பாவுக்கு வயசா ச்சு. உனக்கு ஒரு பாதுகாப்பான இடம் வேணாமா? உன்னாட்டம் நிறையப் பெண்கள் என் கம்பெனில வேலை செய்றாங்க. உனக்கு அங்க கல்ல எதிர்காலம் இருக்கு. யோசிச்சு முடிவு சொல்லு' என்று அவன் கூறிக் கொண்டிருந்தபோதுதான் மூர்த்தி கோயில் பிரசாதத்துடன் அங்கு போய்ச் சேர்ந்தான். 'வா, மூர்த்தி நல்ல நேரத்துக்கு வந்தே தட்ல என்ன?" என்று கேட்டாள் மஞ்சு, “காமாட்சியம்மன் கோயிலுக்குப் போய் அர்ச்சனை பண்ணி பிரசாதம் கொண்டு வந்திருக்கேன்.' பிரசாதத்தை அவளிடம் கொடுத்தான். "நல்ல சகுனம்' சாமிப் பிரசாதம்கூட வந்திருக்கு" என்றான் சர்க்கஸ்காரன். "இவர் சர்க்கஸ் கம்பெனிலிருந்து வந்திருக்கார் என்னை சர்க்கஸ்ல் சேரச் சொல்றார்!" என்று மூர்த்தியின் முகத்தைப் பார்த்தாள் மஞ்சு. ! நீ என்ன சொன்னே?' 124

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேத_வித்து.pdf/129&oldid=918646" இலிருந்து மீள்விக்கப்பட்டது