பக்கம்:வேத வித்து.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'கா ஒண்ணும் சொல்லலே. உன் அபிப்ராயத்தைச் சொல்' என்றாள். 'உங்க அப்பாவும் யுேம் முடிவு செய்ய வேண்டிய விஷயம் இது. இதல நான் சொல்றதுக்கு என்ன இருக்கு?" மஞ்சு இந்த பதிலை எதிர்பார்க்கவில்லை. மூர்த்தி அக்கறை காட்டாமல் பேசியது அவளுக்கு வருத்தமாயிருந்தது. ‘'எதுக்கும் நீங்க நாளைக்கு வாங்கய்யா. பேசிக்குவம்' என்று சர்க்கஸ் ஆசாமியிடம் சொல்லி அனுப்பிவிட்டாள். மூர்த்திக்கு அவனை அறியாமல் அந்த சர்க்கஸ்காரன்மீது ஒரு வெறுப்பு தோன்றியது. பொறாமையாகவும் இருந்தது. கேரமாச்சு, மஞ்சு போயிட்டு காளைக்கு வந்து பாக்கறேன். பாடசாலைல காத்திண்டிருப்பா' என்று சொல்லிப் புறப்பட்டான் மூர்த்தி. மஞ்சுவிடம் தனக்குள்ள உரிமை என்ன, உறவு என்ன என்பதை மூர்த்தியால் திட்டவட்டமாகப் புரிந்துகொள்ள முடிய வில்லை. ஆயினும் மஞ்சு தன்னை விட்டு விலகிச் செல்வதுபோல் உணர்ந்தான். 'மூர்த்தி தோனே வேதம், வேதம்னு சொல்லிண்டு அவளை விட்டு விலகிப்போயிருக்கே? கன்னா யோசிச்சுப் பார்! அவளாகவா விலகிச் செல்கிறாள். அவள் இதுவரை உன்னைத்தானே கம்பிக் கொண்டிருந்தாள். நீ வேத பாடசாலையில சேர்ந்தப்புறம் தானே அவள் நம்பிக்கை குறைய ஆரம்பிச்சிருக்கு? சர்க்கஸ்காரன் அவளுக்கு நல்ல எதிர்காலம் இருப்பதாகச் சொல்கிறான். பாதுகாப்பு இருக்கிறது என்று அழைக்கிறான். தோன் அவள் கேள்விக்குச் சரியான் பதில் சொல்லாமல் அந்த சர்க்கஸ்காரனைக் கண்டு பொறாமைப்படுகிறாய்? இப்ப சொல், விலகிப் போறது யோ, அவளா?' என்று மூர்த்தியின் உள் மனம் கேட்டது. 'உண்மைதான்; மஞ்சுவிடமிருந்து கான்தான் விலகி வங் திருக்கேன், வேதத்தின் மீதுள்ள பற்றுதல் காரணமா அவள் எதிர்காலத்தைப் பற்றிக் கவலைப்படாம வந்திருக்கேன். இப் போது அவள் சர்க்கஸ் கம்பெனியில சேருவதற்கு சரியாக பதில் சொல்லாமல் அலட்சியமா வந்தது என் தப்புதான்' என்றது இன்னொரு மனம். 125

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேத_வித்து.pdf/130&oldid=918649" இலிருந்து மீள்விக்கப்பட்டது