பக்கம்:வேத வித்து.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கனபாடிகள் ஒரு சூன்யமான நிலையில் உள்ளே போகப் பிடிக்காமல் திண்ணையிலேயே சாய்ந்துகொண்டார். புழுக்கம் அதிகமாகியிருந்தது. எழுந்துபோய் ஆகாசத்தைப் பார்த்தார். வடமேற்கில் இருண்டிருந்த் கருமேகம் இப்போது முழுமையாய்க் கரைந்து போயிருந்தது. மரங்களில் சருகுகள் இங்கொன்று அங்கொன்றாய் உதிர்ந்து கொண்டிருந்தன. அக்கூ பட்சி மட்டும் பிடிவாதமாக இன்னமும் கத்திக் கொண்டிருந்தது. இச்சமயம் ஏழெட்டு பிராம்மணர்கள் கூட்டமாக வந்து கனபாடிகளைப் பார்த்து கைகூப்பி வணங்கினார்கள், இந்த பதைபுதைக்கிற வெயில்ல எல்லாருமா எங்க இவ்வளவு தூரம்...' என்று இழுத்தாற்போல் கேட்டார் கனபாடிகள.

மழையே இல்லாம ஏரி குளமெல்லாம் வறண்டு போச்சு, பயிர் பச்சையெல்லாம் பாழாப் போயிடும் போல இருக்கு, ஆடு மாடெல்லாம் ஒவ்வொண்ணா செத்துண்டிருக்கு. நீங்கதான் காப்பாத்தனும்' என்றார்கள்.

கான் என்ன பண்ண முடியும்?' என்று கேட்டார் கன பாடிகள். - 'உங்க வாயால விராடபர்வம் வாசிச்சா போதும் மழை கொட்டு கொட்டுன்னு கொட்டிடுமே!" என்றார்கள். 'விராட பர்வம் யார் வாசிச்சாலும் மழை வரும் அந்தக் கதையின் மகிமை அப்படி' என்றார் கனபாடிகள். 'இருக்கலாம். ஆனா உங்க மாதிரி யாகம் பண்ணவா, சாஸ்திரம் படிச்சவா, வேதம் ஒதினவா வாயால சொன்னா அதனுடைய மகிமையே தனி' என்றார்கள். 'நீங்கள்ளாம் கொஞ்ச காளைக்கு முன்னால எங்கிட்ட சாஸ்திர விளக்கம் கேட்க வந்தப்போ கான் சொன்ன தீர்ப்பு உங்களுக்குப் பிடிக்கல. அதுக்காக என் மேல கோபப்பட்டு என்னையே பாய்காட் பண்ணப் போறதாப் பேசிண்டேளாம். நான் சாஸ்திரம் படிச்சவன் வேதம் ஒதினவன் என்பதெல்லாம் உங்களுக்கு அப்பத் தெரியாமப் போச்சு. இப்ப மழை வேனுங்கறப்பு மட்டும் தெரியறது இல்லையா? தயவுபண்ணி 129

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேத_வித்து.pdf/134&oldid=918656" இலிருந்து மீள்விக்கப்பட்டது