பக்கம்:வேத வித்து.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'உலகத்துல அக்கிரமம் அதிகமாயிடுத்து. அதான்' என்றார் கனபாடிகள், கமலா வந்தாள். 'காஞ்சீபுரம் போறயாமே? போயிட்டு வா. ஒன்பது பத்தரை ராகுகாலம். அதுக்கப்புறமா புறப்படு. துணைக்கு யாரு?" என்று கேட்டார் கனபாடிகள்.

'கொண்டி கிட்டா தான்...' என்றாள் கமலா, 'அங்கஹlனமான வாளை கொண்டி, கூணன், குருடன்னு சொல்லக் கூடாது. அவா மனசு கஷ்டப்படும். அது பாவம் மில்லையா? கிட்டாவுக்குச் சின்ன வயசுல இளம்பிள்ளை வாதம் வந்து கால் ஊனமாயிடுத்து. ஆனாலும், அவன் மாதிரி யாரால வேகமா நடக்க முடியும்?' மூட்டை முடிச்சுகளைக் கொண்டு போய்த்திண்ணை யில் வைத்துவிட்டு, சவாரி வண்டி அழைத்து வரப்போனான். கிட்டா, பாகீரதி உள்ளே போயிருந்த சமயம் பார்த்து கமலா அப்பாவின் காதில் கிசுகிசுத்தாள்: "அப்பா, கான் சொன்ன தெல்லாம் ஞாபகம் இருக்கட்டும். ஏதோ கடத்திருக்கு. ஆனா எதையும் தீர்மானிக்க முடியலை. அவசரப்பட்டு எந்த முடிவுக்கும் வந்துடா தீங்க!' பாகீரதி கொண்டு வந்த குங்குமத்தை நெற்றியில் இட்டுக் கொண்ட கமலா, வரேன் பாகீரதி ஒரு மாசமா சேர்ந்து இருந்துட்டு இப்ப பிரியறதுக்கு கஷ்டமாயிருக்கு' என்று சொல்லும்போதே கமலாவுக்கு துக்கம் தொண்டையை அடைத்தது. 'பஸ்ஸுக்கு நேரமாச்சு, புறப்படு' என்று துரிதப்படுத்திய கிட்டா முட்டைகளை வண்டியில் ஏற்றினான். பாடசாலைப் பிள்ளைகள் கும்பலாக வாசலுக்கு வந்து வழி அனுப்பி வைத் தார்கள். எல்லாருக்கும் கம்லா காசு கொடுத்தாள். அவள் புறப்பட்டுப் போனதும் பாடசாலையே வெறிச்சோடி விட்டது. 128

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேத_வித்து.pdf/133&oldid=918654" இலிருந்து மீள்விக்கப்பட்டது