பக்கம்:வேத வித்து.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

á á அப்பா, கமலா காஞ்சீபுரம் போறாளாம்!' என்று சொல்லிக் கொண்டே வந்தாள் பாகீரதி. 'ஏன்? என்ன அவசரமாம் அவளுக்கு' என்று கேட்டார் கனபாடிகள். 'வந்து ஒரு மாசத்துக்கு மேல ஆறதே! இத்தனை நாள் தங்கியிருந்ததே அதிசயம்!" 'வாஸ்தவம்தான் அவள் எங்க இப்போ?" 'அம்புலுவைக் குளிப்பாட்டப் போயிருக்கா. மத்தியானம் பஸ்ஸாக்கே போகப் போறாளாம்.' "கிட்டாவையும் காணலையே?' "தோட்டத்துலேந்து கொஞ்சம் கத்தரிக்கா பறிச்சிண்டு வரச் சொன்னேன். கமலா போறப்போ கொடுத்தனுப்பலாம்னு. மழை இல்லாம தோட்டமே வறண்டு கிடக்கு.' 'அத பார், அக்கூ பட்சி கத்தறது. அது கத்தினா மழை வரும்னு சொல்லுவா." "அது தினம்தான் கத்தறது. ஆனா அந்த மழைக்குத்தான் காது கேட்கலை இப்படியே காஞ்சுதானா பயிர் பச்சையெல்லாம் வாடவேண்டியதுதான். தாது வருஷத்துப் பஞ்சம்னு சொல்வாளே, அந்த மாதிரி ஆயிடுமோ, என்னவோ?' என்றாள் பாகீரதி. 127

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேத_வித்து.pdf/132&oldid=918652" இலிருந்து மீள்விக்கப்பட்டது