பக்கம்:வேத வித்து.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திக்குமுக்காடி ஐயோ' என்று அலறினான். இன்னொரு முழுக்கு. அந்த வேகத்தில் தலைதூக்க முயன்று, முடியாமற் போய் ஒரு வாய் தண்ணீரும் குடித்து உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த நிலையில்-சட்டென்று இரண்டு கைகள், - அவன் குடுமியைப் பிடித்துத் துரக்கி இழுத்துக் கரை சேர்த்தன. வளைக்கரங்கள்! அவன் ஒன்றும் புரியாமல் மலர மலர விழித்தான். சற்றுமுன் பார்த்த அந்த அரை நிர்வாணப் ப்ெண்தான்! அவள் அவசரமாக அவன் கைகளைப் பிடித்து இழுத்து மல்லாக்கப் படுக்க வைத்து வயிற்றின்மீது தன் காலால் ஒரு மிதிமிதித்தாள். வயிற்றுக்குள் போன தண்ணீர் அவன் வாய் வழியாகப் பீச்சி அடித்தது. அப்புறம்தான் மூர்த்திக்கு மூச்சு சீராக வரத் தொடங்கியது. மூர்த்தி அவளை நன்றியோடு பார்த்துக்கொண்டே 'ே யார்?' என்று கேட்டான். 'கழைக் கூத்தாடி மகள். பூர்விகம் மகாராஷ்டிரம்.' 'நன்னாத் தமிழ் பேசறயேl' 'இரண்டு தலைமுறையாகத் தமிழ் நாட்டிலேதான் இருக்கேன். "ஊர் ஊராய்ப் போய் தெருவில் டமாரம் தட்டி வித்தை செய்து கம்பிமேல் கடந்து, கஜகர்ணம் போட்டு-வயித்துப் பிழைப்பு.’ - ‘'இப்ப எந்த ஊர்ல...' "இதே ஊர்லதான். தேரடித்தெரு சரபோஜி சத்திரத்து வாசல்ல...' r 'சரபோஜி சத்திரமா! அந்தத் தெருவில்தானே எங்க வேத பாடசாலையும் இருக்கு எனக்குத் தெரியாமப் போச்சே! தினமும் வித்தை செய்வீங்களா?" "ஆமாம்...' அவளையே ஆச்சரியத்தோடு வைத்த கண் வாங்காமல் பார்த்தான். வடித்தெடுத்த சிலையாய், அழகு பிம்பமாய், ஜல தேவதையாய்க் காட்சி அளித்த அந்தப் பெண்ணுக்குத் தன்

18

13

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேத_வித்து.pdf/15&oldid=1281551" இலிருந்து மீள்விக்கப்பட்டது