பக்கம்:வேத வித்து.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செம்பில் ஜலம் எடுத்துக்கொண்டு கொல்லைப் பக்கம் போய், சாக்கடை ஒரமாக உட்கார்ந்து, சிறுநீர் உபாதையை முடித்துக்கொண்டு திரும்பினார். இருள் சூழ்ந்திருந்த மாட்டுக் கொட்டிலில் பசு மாட்டின் கண்கள் மட்டும் பளபளத்தன அதைப் பார்த்துக் கொண்டே வந்தவரின் கால்களைக் கீழே இருந்த வாளி ஒன்று பலமாகத் தாக்கவே, கனபாடிகள் வலி பொறுக்காமல் 'அப்பா, ராமா!' என்று அலறிக்கொண்டு கீழே விழுந்து விட்டார். 'ராமா' என்ற கனபாடிகளின் குரல் கேட்டு அவர் வளர்ப்புச் செல்லம் அணில் குட்டி பயந்து போய், படபடத்து முலைக்கு முலை ஓடியது. வாளிச் சத்தமும் கனபாடிகளின் அலறலும் கேட்டுப் பதறி எழுந்த ராவ்ஜியும் கிட்டாவும் ஓடிச் சென்று 'கீழே விழுந்துட்டேளா? ஐயோ, என்ன ஆச்சு?' என்று கேட்டுக் கொண்டே கனபாடிகளைத் தூக்கி நிறுத்தினார்கள். "வாளி தடுக்கிட்டுதுடா,கல்ல அடி ரொம்ப வலிக்கிறதுடன. கிட்டா கால் வீங்கியிருக்கா பாரு' என்று முனகினார் கனபாடிகள். இருவரும் அவரை கைத்தாங்கலாய் அணைத்துக்கொண்டு உள்ளே அழைத்துச் சென்றார்கள். எல்லா துக்கங்களும் சேர்ந்துகொள்ளவே கனபாடிகள் சின்னக் குழந்தைப்போல் அழத் தொடங்கி விட்டார். "சிதம்பரம் போய் வரமுடியுமான்னு சந்தேகமாயிருக்கு, கிட்டா இன்னும் காலஞ்சு நாள்தான் இருக்கு. உடம்பில சக்தி குறைஞ்சு போச்சு, ஒரு சின்ன வலிகூடத் தாங்கிக்க முடியலே!" என்று வருத்தப்பட்டார். "இப்படி புட்டினிக் கிடந்தா உடம்பு என்னத்துக்கு ஆகும்?' என்றான் கிட்டா. 'இந்தாங்க, இந்தப் பாலைக் குடியுங்க. சுடச்சுட காய்ச்சுண்டு வந்திருக்கேன்' என்று சொல்லி கனபாடிகளிடம் பாலைக் கொடுத்தார் ராவ்ஜி. அதை வாங்கிக் குடித்த பிறகுதான் கனபாடிகளுக்குக் கொஞ்சம் தெம்பு வந்தது. சற்று நேரத்துக் கெல்லாம் தூங்கிப் போனார். - 166.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேத_வித்து.pdf/171&oldid=918737" இலிருந்து மீள்விக்கப்பட்டது