பக்கம்:வேத வித்து.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காலையில் எழுந்து கடிகாரத்தைப் பார்த்தவர் இவ்வளவு நேரமாவா தூங்கிட்டேன்! மணி ஒன்பது' என்று தமக்குத் தாமே சொல்லிக் கொண்டு ஆச்சரியப்பட்டார். அடுத்தகணம் அடிப்பட்ட காலைப் பார்த்து, "ஸ்ஸ் கன்னா வீங்கிப் போயிருக்கு' என்றார். நாளைக்குள் சரியாப் போயிடும். இன்னைக்கு நீங்க குளிக்க வேணாம். பேசாமல் படுத்துண்டே இருங்கோ' என்றான் கிட்டா. "என்னால ஸ்நானம் பண்ணாமலும் இருக்க முடியாது; பூஜை பண்ணாமலும் இருக்க முடியாது. நான் போய் இதோ குளிச்சுட்டு வந்துடறேன்' என்று எழுந்தார். அந்த நேரம் பார்த்து கனபாடிகளைப் பார்க்க வாசலில் ஒரு பெரிய கூட்டம் வந்து கின்றது. 'விராடபர்வம் வாசிக்கணும்னு உங்களைக் கேட்டுக்கப் போறதா கேத்து அரசமரத்தடில கூட்டம் போட்டுப் பேசிண் டிருந்தா, அவா கான் வந்திருக்கா போலிருக்கு' என்றான் கிட்டா. 'ஓகோ, அ ப் ப டி ய ர! பிராம்மணாள் மட்டுமா? குடியான வாளும் வந்திருக்காளா?' என்று கேட்டுவிட்டு அங்க வஸ்திரத்தை எடுத்துப் போர்த்திக்கொண்டவர் அதோ அந்த கைக்கம்பைக் கொண்டு வர இப்படி' என்றார். கிட்டா கொண்டு வந்த கம்பை வாங்கிப் பார்த்துவிட்டு 'ம்' இத்தனை நாள் இதை நான் தொட்டதே இல்லை. எங்கப்பா உபயோகிச்சது' என்று பெருமையோடு கூறியபடி அதை ஊன்றிக் கொண்டே வாசலுக்கு விந்திவிந்தி நடந்து போனார். அவரைப் பார்த்ததும் ஊரார் கையெடுத்துக் கும்பிட்டனர். "இந்த வெயில்ல எல்லாருமா எங்க இப்படி..?" 'உங்களைப் பார்க்கத்தான். மழையே இல்லாம பயிர் பச்சையெல்லாம் போயிட்டுது. ஆடுமா டெல்லாம் ஒண்னு ஒண்ணா செத்துட்டிருக்கு. தாது வருஷத்துப் பஞ்சம் மாதிரி மறுபடியும் வந்துருமோன்னு தோணுது. விதை கெல்லைச் சாப்பிட வேண்டிய கதிக்கு வந்துட்டோம்.' "என்ன சொன் னிங்க! விதை நெல்லைச் சாப்பிடப் போlங்களா? ஊஹ9ம்l அந்த நிலைக்கு உங்களை நான் ஒரு 167

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேத_வித்து.pdf/172&oldid=918739" இலிருந்து மீள்விக்கப்பட்டது