பக்கம்:வேத வித்து.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

:யனசுல நீங்க என்ன நினைச்சுண்டு பேசlங்கன்னு புரிஞ்சு போச்சு. கொஞ்ச நாளைக்கு முன்னால பார்வதியின் புருஷன் பினாங்கிலிருந்து திரும்பி வந்தப்போ அவனைச் சேர்த்துக்கலாமான்னு உங்களிடம் யோசனை கேட்க வந்தோம். அப்ப நீங்க பிடிவாதமா சாஸ்திரம் ஒப்புக்காதுன்னு சொல்லி அனுப்பிட்டேளே, ஞாபகம் இருக்கா? இப்ப மட்டும் அந்த சாஸ்திரம் ஒப்புக்கறதோ? ஊருக்கு ஒரு சாஸ்திரம். உங்களுக்கு ஒரு சாஸ்திரமோ?' என்று தைரியமாகக் கேட்டார் ஒருவர். "இப்ப நான் உங்களைக் கேட்கிறது சாஸ்திரம் அல்ல. உங்க அபிப்ராயம்தான். எங்ககிட்ட ஒரு வ ச ர் க் ைத கேட்டேளா?'ன்னு நாளைக்கு நீங்க பழி சொல்லக் கூடாது பாருங்க, அதுக்காகத்தான். என் பெண்ணை இப்படி இந்த நிலையிலே, விட்டுட்டுப் போனா அவளை யார் காப்பாத்துவா? யாராவது அவளை நல்லபடியா காப்பாத்துவேளா? அவளுக்கு நான் ஒரு வாழ்க்கையை அமைச்சுக் கொடுக்க வேணாமா? உங்களில் யாருக்காவது இஷ்டம் இருந்தா, யாராவது காப்பாத்த முன் வந்தா, இப்பவே சொல்லுங்க. இந்த நிமிஷமே என் சொத்தையெல்லாம் எழுதி வைக்கத் தயாராயிருக்கேன்' என்றார். யாருமே பதில் பேசவில்லை. வாய்மூடி மெளனிகளாக முகத்தை வேறுபக்கம் திருப்பிக் கொண்டார்கள். 'தெரியும். உங்க பதில் இதுவாத்தான் இருக்கும்னு தெரியும். என் பெண்ணைக் காப்பாத்துங்கோன்னு உங்களை கான் கட்டாயப்படுத்தப் போறதில்லே. கெஞ்சப் போறதில்லே. அது உங்க இஷ்டம். ஆனா, நான் ஒரு முடிவுக்கு வரதுக்கு முன்னால உங்கனை ஒரு வார்த்தை கேட்க வேண்டியது என் கடமை இல்லையா? அதுக்காகத்தான் கேட்டேன். இப்ப நீங்க போகலாம்' என்று அவர்களை அனுப்பிவிட்டு மெதுவாக நடந்து போய் ஊஞ்சலில் உட்கார்ந்தார். உட்கார்ந்தவர் "கிட்டா! நெஞ்சை வலிக்கிறது.டா!' என்று மார்பைக் கையால் தாங்கியபடி ஊஞ்சலில் சாய்ந்து படுத்துக்கொண்டார். - 170

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேத_வித்து.pdf/175&oldid=918748" இலிருந்து மீள்விக்கப்பட்டது